இந்தியா

சாதனை விளம்பரத்தில் கொல்கத்தா மேம்பாலம்- இப்படியா பெருமை தேடுவது: BJPயை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசின் சாதனை விளம்பரத்தில் கொல்கத்தாவில் உள்ள மேம்பாலம் படம் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சாதனை விளம்பரத்தில் கொல்கத்தா மேம்பாலம்- இப்படியா பெருமை தேடுவது: BJPயை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
desk
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சி செய்து வருகிறது. அடுத்த ஆண்டு உத்தர பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், பாஜக அரசின் ஐந்து ஆண்டுகால சாதனையை விளக்கி ஆங்கில நாளேடுகளில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

இந்த விளம்பரத்தில் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள மேம்பாலம் இடம் பெற்றுள்ளது. இந்த படத்தைக் குறிப்பிட்டு யோகி ஆட்சியில் வளர்ச்சியடைந்த உத்தர பிரதேசம் என்று விளம்பரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விளம்பரத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பலரும் மம்தா பானர்ஜி அரசால் கட்டப்பட்ட மேம்பாலத்தை யோகியின் சாதனை பட்டியலில் காட்டுவதாக என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனங்களை முன்வைத்தது.

அதேபோல்,முதல்வர்களை மாற்றுவதைத் தவிர , வேறு எதுவும் தெரியாத பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி ஆட்சியின் சாதனை படங்களை உரிமை கோருவதாக என முன்னாள் ஒன்றிய அமைச்சர் முகுல் ராய் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இந்த விளம்பரத்தை நெட்டிசன்கள் வெளியிட்டு, இப்படிப் படத்தைக் கூடவா திருடி உரிமை கொண்டாடுவீர்கள் என விமர்சனம் செய்து வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories