இந்தியா

எறும்புக்காக விமானத்தையே மாற்றிய ஏர் இந்தியா... உண்மையான காரணம் என்ன தெரியுமா?

டெல்லி - லண்டன் விமானத்தின் இருக்கையில் எறும்புகள் மொய்த்ததால், பயணிகள் வேறு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

எறும்புக்காக விமானத்தையே மாற்றிய ஏர் இந்தியா... உண்மையான காரணம் என்ன தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று லண்டன் செல்லவிருந்தது ஏ1-111 விமானம். இந்த விமானம் புறப்படுவதற்கு முன்னர் பிசினஸ் கிளாஸ் இருக்கைகள் இருந்த பகுதியில் எறும்புகள் ஊர்வது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, பயணிகள் அனைவரும் தங்கள் லக்கேஜை எடுத்துக்கொண்டு விமானத்திலிருந்து வெளியேறும்படியும், லண்டன் செல்ல வேறு விமானம் வரும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் காரணம் என்னவென்று கேட்டனர். அந்த விமானத்தில் பூட்டான் இளவரசர் ஜிக்மே நாம்கியெல் வாங்சுக் பயணிப்பதாகவும், அவர் பயணிக்கும் பிஸினஸ் கிளாஸில் எறும்புகள் வந்துவிட்டதாகவும் அதனால் விமானத்தை மாற்றுவதாகவும் கூறியுள்ளனர்.

பூடான் மன்னரின் மகனுக்காக ஏர் இந்தியா நிறுவனம் விமானத்தையே மாற்றுவதைக் கேட்ட பயணிகள் ஆச்சரியமடைந்தனர்.

கடந்த மே மாதம் அமெரிக்காவுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட அரை மணி நேரத்திற்குப் பின்னர் மீண்டும் டெல்லிக்கே திரும்பியது. விமானத்தில் வவ்வால் ஒன்று இருந்ததால் விமானம் திரும்பியதோடு வேறு விமானத்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories