இந்தியா

மோடி பெயரைச் சொல்லி தகராறு செய்த பயணி... பாதி வழியில் தரையிறங்கிய விமானம்! #Video

பாரிஸிலிருந்து டெல்லிக்கு வந்த விமானத்தில் மோடி பெயரைச் சொல்லி ஒருவர் தகராறில் ஈடுபட்டதால் பாதி வழியில் தரையிறங்கிய விமானம்.

மோடி பெயரைச் சொல்லி தகராறு செய்த பயணி... பாதி வழியில் தரையிறங்கிய விமானம்! #Video
Kalaignar TV
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாரிஸிலிருந்து டெல்லி நோக்கி ஏர் பிரான்ஸ் விமானம் வந்து கொண்டிருந்தது. இந்த விமானம் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, இந்திய பயணி ஒருவர் திடீரென, சக பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, விமானத்திலிருந்த உதவியாளர்கள் அவரை அமைதியாக இருக்கும்படி கூறியுள்ளனர். ஆனால் அவர் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியின் பெயரைச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் விமான அதிகாரிகள் உடனடியாக விமானத்தை பல்கேரியாவின் தலைநகரான சோஃபியாவில் இறக்கினர். பிறகு அந்த நபரை விமானத்தில் இருந்து வெளியேற்றி விட்டு, விமானம் அங்கிருந்து டெல்லிக்கு மீண்டும் தன் பயணத்தைத் தொடங்கியது.

இந்த நிகழ்வை, விமானத்தில் இருந்த சக பயணி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், விமானப் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவித்ததாக அந்த நபர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என விமான அதிகாரி ஏஞ்சலோவ் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories