தி.மு.க

"திருச்சி குலுங்க குலுங்க பிரம்மாண்டமாக நடைபெற்ற தி.மு.க பொதுக்கூட்டம்” - ஆடிப்போன ஆளுங்கட்சி!

அ.தி.மு.க-வை வீழ்த்தி திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அமரவிருப்பதை கட்டியம் கூறியது இப்பொதுக்கூட்டம்.

"திருச்சி குலுங்க குலுங்க பிரம்மாண்டமாக நடைபெற்ற தி.மு.க பொதுக்கூட்டம்” - ஆடிப்போன ஆளுங்கட்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

திருச்சி - சிறுகனூரில் தமிழகத்தின் ‘விடியலுக்கான முழக்கம்’ என்ற பெயரில் நேற்று நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேருரையாற்றினார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் கூடிய மக்கள் திரளையும், பிரம்மாண்டத்தையும் பார்த்து அதிர்ந்து போயிருக்கின்றன எதிர்க்கட்சிகள். அ.தி.மு.க-வை வீழ்த்தி திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அமரவிருப்பதை கட்டியம் கூறியது இப்பொதுக்கூட்டம்.

மிக பிரம்மாண்டமான முறையில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டது. பந்தலின் வலது மற்றும் இடது புறம் சுமார் நூறு மீட்டர் தூரத்திற்கு நடை மேடைகள் அமைக்கப்பட்டு, அதன் வழியே தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நடந்து சென்று தொண்டர்களின் வெற்றி முழக்கங்களை ஏற்றுக்கொண்டார்.

சுமார் 759 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்ட இந்தப் பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் அலைகடலெனத் திரண்டனர். நூற்றுக்கணக்கான எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டிருந்தன.

"திருச்சி குலுங்க குலுங்க பிரம்மாண்டமாக நடைபெற்ற தி.மு.க பொதுக்கூட்டம்” - ஆடிப்போன ஆளுங்கட்சி!

ஒளிப்பதிபுக்காக அமைக்கப்பட்டிருந்த க்ரேன்களும், பறந்து பறந்து படம் பிடித்த ட்ரோன்களும், மொத்தக் கூட்டத்தையும் டிஜிட்டலாக காட்சிப்படுத்தின. அவை நேரலையாக எல்.இ.டி திரைகளில் எதிரொலித்தன.

தி.மு.க கழக முன்னணியினரும், துறைசார் வல்லுநர்களும் உரையாற்றியதைக் கேட்டுச் சிலிர்த்து, தி.மு.க தலைவரின் உறுதிமொழிக்காகக் காத்திருந்தனர் தொண்டர்கள்.

மேடையேறிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக மக்களுக்கான மகத்தான 7 உறுதிமொழிகளை வழங்கினார். அடுத்த பத்தாண்டுகளில் தமிழகத்தை மேம்படுத்தக்கூடிய அந்த உறுதிமொழிகளை ஒவ்வொன்றாக அவர் சொல்லச்சொல்ல, டிஜிட்டல் திரைகள் அவற்றைக் காட்டின.

இவ்வாறாக, தீரர்கள் கோட்டமாம் திருச்சியில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தின் பிரம்மாண்டம் ஆட்சியாளர்களுக்கு கிலியை ஏற்படுத்தியிருக்கிறது.

banner

Related Stories

Related Stories