தி.மு.க

‘உரிமைத்தொகை’ : தமிழுக்குத் தி.மு.க அளித்த கொடைகளில் மற்றுமோர் புதிய வார்த்தை!

சொல்லையும், செயலையும் சமூக நீதிக்காகவே அர்ப்பணித்த தலைவர் கலைஞரின் வழிவந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பெண்களின் மேம்பாட்டுக்காக அறிவித்துள்ள உறுதிமொழி ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

‘உரிமைத்தொகை’ : தமிழுக்குத் தி.மு.க அளித்த கொடைகளில் மற்றுமோர் புதிய வார்த்தை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

திராவிட முன்னேற்றக் கழகம் சமத்துவம், சமூக நீதிக் கொள்கைகளை என்றும் உயர்த்திப் பிடிக்கும் இயக்கம். சமூக நீதியைக் காக்க முத்தமிழறிஞர் கலைஞர் ஆற்றிய அரும்பணிகள் ஏராளம்.

ஊனமுற்றோர் என்றிருந்த சொல்லை மாற்றுத்திறனாளியாக்கியவர் கலைஞர். திருநங்கை என்ற சொல்லைப் பரவலாக்கியவர் கலைஞர். விதவை என்ற சொல்லைக் கைம்பெண் என்றாக்கியவர் கலைஞர்.

பெண்களுக்கான சொத்துரிமை தொடங்கி, அனைத்து பணிகளிலும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வரை ஏராளமான திட்டங்களை மகளிர் மேம்பாட்டுக்காகச் செயல்படுத்தியது தி.மு.க ஆட்சி.

சொல்லையும், செயலையும் சமூக நீதிக்காகவே அர்ப்பணித்த தலைவர் கலைஞரின் வழிவந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பெண்களின் மேம்பாட்டுக்காக அறிவித்துள்ள உறுதிமொழி ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

சமூக நீதி காத்த கலைஞர் வழிவந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் என அறிவித்திருக்கும் 1000 ரூபாயை ‘உரிமைத்தொகை’ எனும் சொல்லால் குறிப்பிட்டிருக்கிறார்.

பெண்களின் கண்ணியத்தைப் போற்றும் வகையில், உதவித்தொகை என்று அறிவிக்காமல் உரிமைத்தொகை என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது தமிழக மக்களிடையே வெகுவான பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

ரிக்‌ஷாவில் மனிதர்களை அமரவைத்து இழுத்துச் செல்லும் கை ரிக்‌ஷாக்கள் சமத்துவத்திற்கு எதிரானவை என்பதால் கை ரிக்‌ஷா அவலத்தை ஒழித்து சைக்கிள் ரிக்‌ஷாக்களை வழங்கினார் கலைஞர்.

கலைஞர் வழியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் கொடுமையை முற்றிலுமாக ஒழித்து, இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories