இந்தியா

“ஆண் குழந்தைக்காக மனைவியை நிர்வாண பூஜைக்கு அனுப்பிய கணவன்” : மகாராஷ்டிராவில் 'பகீர்' சம்பவம்!

ஆண் குழந்தை வேண்டி மனைவியை கணவனே நிர்வாண பூஜைக்கு அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“ஆண் குழந்தைக்காக மனைவியை நிர்வாண பூஜைக்கு அனுப்பிய கணவன்” : மகாராஷ்டிராவில் 'பகீர்' சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், ஆண் குழந்தை வேண்டி சாமியாரிடம் நிர்வாண பூஜைக்கு அனுப்பியதாக கணவர் மற்றும் மாமியார் மீது போலிஸில் புகார் கொடுத்துள்ளார்.

அந்தப் பெண்ணின் புகாரில், "கடந்த நான்கு வருடங்களாக ஆண் குழந்தை இல்லாததால் எனது மாமியார் மற்றும் மாமனார் தொடர்ந்து துன்புறுத்தி வந்தனர். மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினர்.

மேலும் ஆண் குழந்தை வேண்டி ஒரு சாமியாரிடம் கணவரும், மாமியாரும் அழைத்துச் சென்றனர். அப்போது அந்த சாமியார் சாம்பலைக் கொடுத்துச் சாப்பிட வைத்தார். பிறகு உடல் முழுவதும் சாம்பல் பூசி பூசை நடத்தவேண்டும் என்று கூறினார். இப்படிச் செய்தால் குழந்தை பிறக்கும் என்றும் அவர் கூறினார்.

அங்கிருந்து வீட்டிற்கு வந்த உடனே என்னைக் கணவரும், அவரது மாமியாரும் நிர்வாணப்படுத்தி உடல் முழுவதும் சாம்பல் பூசி கொடுமைப்படுத்தினர். மேலும் ஆண் குழந்தை இல்லாததால் வேறு ஒரு பெண்ணையும் என கணவர் ரகசியமாகத் திருமணம் செய்துள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.

அப்பெண்ணின் புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து அந்த பெண்ணின் கணவர், மாமியார், சம்பந்தப்பட்ட சாமியார் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories