இந்தியா

“ஏ.. தள்ளு.. தள்ளு.. தள்ளு!” : பிரேக் டவுன் ஆன ரயிலை தள்ளிய ஊழியர்கள் - பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் அவலம்!

பா.ஜ.க ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் பழுதான ரயிலை ஊழியர்கள் தள்ளிச் சென்ற சம்பவம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

“ஏ.. தள்ளு.. தள்ளு.. தள்ளு!” : பிரேக் டவுன் ஆன ரயிலை தள்ளிய ஊழியர்கள் - பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் அவலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பா.ஜ.க ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் பழுதான ரயிலை ஊழியர்கள் தள்ளிச் செல்லும் சம்பவம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

சாலையில் பழுதாகி நிற்கும் கார், பேருந்து போன்ற வாகனங்களை ஊழியர்கள் அல்லது பொதுமக்கள் தள்ளுவதைப் பார்த்திருப்போம். ஆனால், பா.ஜ.க ஆளும் மத்திய பிரதேசத்தில் ஒரு ரயிலை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கைகளால் தள்ளிய வினோதம் அரங்கேறியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா என்ற இடத்தில் ரயில் சென்ற இடத்தில் பராமரிப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென்று ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கேயே நின்றது.

இதையடுத்து, ஒரு தண்டவாளத்தில் இருந்து மற்றொரு தண்டவாளத்திற்கு ரெயில் பெட்டியை கைகளால் தள்ளிச் செல்லுமாறு ரயில்வே அதிகாரிகள் ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இதனால் ரயில்வே ஊழியர்கள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் 70க்கும் மேற்பட்டோர் அந்த ரயிலை வெறும் கைகளால் தள்ளிச் சென்றுள்ளனர்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரயில் பெட்டியை கைகளால் தள்ள வைத்த ரயில்வே அதிகாரிகளின் செயல் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories