இந்தியா

"பா.ஜ.கவின் வருவாய் 50% உயர்வு.. ஆனால் மக்களின் வருவாய்?" : ராகுல் காந்தி கேள்வி!

இந்தியாவில் 2019 - 2020ஆம் ஆண்டில் தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க ரூ.3,429.56 கோடிக்கு நிதி பெற்றுள்ளதாக ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு தெரிவித்துள்ளது.

"பா.ஜ.கவின் வருவாய் 50% உயர்வு.. ஆனால் மக்களின் வருவாய்?" : ராகுல் காந்தி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு ஆண்டுதோறும் அரசியல் கட்சிகளின் நன்கொடை நிதி குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. இதன்படி 2019 - 2020ஆம் ஆண்டிற்கான அறிக்கையை இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

இதில் பா.ஜ.க மட்டும் தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் ரூ.3,623.28 கோடிக்கு நிதி பெற்றுள்ளது என்றும் இந்த நிதியில் ரூ.1,651.022 கோடிக்கு மட்டுமே செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், காங்கிரஸ் கட்சி ரூ.682.21 கோடி நன்கொடையாகப் பெற்றுள்ளது. இது பா.ஜ.கவை காட்டிலும் ஐந்து மடங்கு குறைவாகும். மேலும் ஷரத் பவாரின் என்.சி.பி கட்சியின் நிதியும் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த முறை உயர்த்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நாடே கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், பா.ஜ.க கட்சியின் நன்கொடை நிதி உயர்ந்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களை உறுப்பினருமான ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில்," தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பா.ஜ.கவின் வசூல் வருவாய் 50% உயர்ந்துள்ளது. பா.ஜ.கவின் வருவாய் உயர்ந்தாலும் மக்களாகிய உங்களின் வருவாய் உயர்ந்துள்ளதா?" எனப் பதிவிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories