இந்தியா

₹6 லட்சம் கோடி: பொதுத்துறை நிறுவனங்களையடுத்து மோடி அரசின் அடுத்த டார்கெட் இதுதானா? வெளியானது புதிய தகவல்!

அரசு, பொதுத்துறைக்குச் சொந்தமான நிலங்களையும் தனியாருக்கு விட ஒன்றிய அரசு ஆலோசனை. அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெற திட்டம் என்று தகவல்.

₹6 லட்சம் கோடி: பொதுத்துறை நிறுவனங்களையடுத்து மோடி அரசின் அடுத்த டார்கெட் இதுதானா? வெளியானது புதிய தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ரயில்வே, விமான நிலையங்கள், சாலைகள் என்று அரசு சொத்துகளை தனியாருக்கு நீண்டகால குத்தகைக்கு விட்டு 6 லட்சம் கோடி திரட்ட முடிவு எடுத்துள்ளதாக நான்கு நாட்களுக்கு முன்பு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையி அடுத்த கட்டமாக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் நிலங்களையும் தனியாருக்கு விற்க ஒன்றிய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி பொதுத்துறை தொலை தொடர்பு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல்., ஏர் இந்தியா, பாரத் எர்த் மூவர்ஸ் உள்ளிட்ட பல பொதுத்துறை நிறுவனங்களின் கீழ் பல லட்சம் ஹெக்டர் நிலங்கள், கட்டடங்கள் உள்ளன.

அவற்றை தனியாருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான அமைச்சரவை ஒப்புதல் பெற்றவுடன் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

banner

Related Stories

Related Stories