இந்தியா

"முதல்வரை அறைந்திருப்பேன்".. பா.ஜ.க அமைச்சரின் பேச்சால் சர்ச்சை : மகாராஷ்டிராவில் பதட்டம்!

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன் என ஒன்றிய பா.ஜ.க அமைச்சர் ரானே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

"முதல்வரை அறைந்திருப்பேன்".. பா.ஜ.க அமைச்சரின் பேச்சால் சர்ச்சை : மகாராஷ்டிராவில் பதட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.கவினர் மக்கள் ஆசி யாத்திரையை நாடு முழுவதும் நடத்தி வருகின்றனர். இதன்படி மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய ஒன்றிய பா.ஜ.க அமைச்சர் நாராயண் ரானே, "நாடு சுதந்திரமடைந்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது என்று கூட மகாராஷ்டிர முதல்வருக்குத் தெரியவில்லை. தனது உதவியாளரிடம் கேட்டு தெரிந்துகொள்கிறார். நான் மட்டும், அப்போது அங்கு இருந்திருந்தால் அவரை அறைந்திருப்பேன்" எனப் பேசியுள்ளார்.

இவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மகாராஷ்டிராவில் பா.ஜ.க, சிவசேனா தொண்டர்களுக்கு இடையே கடும் கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது.

மேலும், மும்பையில் உள்ள ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானே வீட்டின் முன்பு சிவசேனா தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவருக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி, அவரது உருவப்பட்டத்தை தீயிட்டு எரித்தனர். இதனால் மகாராஷ்டிராவில் உள்ள பா.ஜ.க அலுவலகங்களுக்குப் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

"முதல்வரை அறைந்திருப்பேன்".. பா.ஜ.க அமைச்சரின் பேச்சால் சர்ச்சை : மகாராஷ்டிராவில் பதட்டம்!

இதையடுத்து, சிவசேனா நிர்வாகிகள் ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானே மீது காவல்நிலையத்தில் புகார் செய்தனர். இந்த புகாரின் அடிப்படையில் நாசிக் போலிஸார் ஒன்றிய அமைச்சர் மீது மூன்று பிரிவுகளில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

இதனால் ஒன்றிய அமைச்சர் கைது செய்யப்படுவார் என தகவல் வெளியானது. இதையடுத்து அமைச்சர் நாராயண் ரானே "யாரும் என்னைக் கைது செய்யவில்லை. கைது செய்ய நான் சாதாரண மனிதரா? ஊடகங்கள் தவறாகச் செய்தி வெளியிடுகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories