இந்தியா

மீண்டும் எகிறிய சமையல் எரிவாயு விலை.. தொடர்ந்து மக்களை வஞ்சிக்கும் மோடி அரசு.. ஒரே ஆண்டில் ரூ.265 உயர்வு!

இந்தியாவில், ஒரே ஆண்டில் சமையல் சிலிண்டர் விலை ரூ. 265 வரை உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் எகிறிய சமையல் எரிவாயு விலை.. தொடர்ந்து மக்களை வஞ்சிக்கும் மோடி அரசு.. ஒரே ஆண்டில் ரூ.265 உயர்வு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதனால் நாடுமுழுவதும் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்து விற்பனையாகி வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், சமையல் எரிவாயு விலையையும் ஒன்றிய அரசு உயர்த்தி வருவது மக்களுக்கு இன்னும் கூடுதல் சுமையாக அமைந்துள்ளது.

மேலும் இந்த விலை ஏற்றத்தால் மக்களின் அன்றாடத் தேவைகளான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் விலையும் மறைமுகமாக உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றத்தால் நடுத்தர மக்களும், ஏழை எளிய மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று கூட செய்தியாளர்களைச் சந்தித்த ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், "பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியாது. மக்கள் துயரங்களைச் சந்திப்பது ஏற்புடையதே" என அலட்சியமாகப் பதிலளித்துள்ளார்.

இந்நிலையில், சமையல் சிலிண்டர் விலை இன்று மீண்டும் 25 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் குடும்பத் தலைவிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் கடந்த ஒரே ஆண்டில் மட்டும் 265 ரூபாய் வரை சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.

2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சிலிண்டர் விலை ரூ. 610 ஆக இருந்தது. ஆனால் தற்போது ஒரே வருடத்தில் 875 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதுவும் இந்த கொரோனா நெருக்கடியில்தான் மோடி அரசு கடுமையாக சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ளது.

ஒன்றிய மோடி அரசின் தொடர் விலை ஏற்றத்தால் சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாயை நெருங்கிவிட்டது. இப்படியே சென்றால் விறகு அடுப்பில்தான் சமைக்க வேண்டிய நிலை ஏற்படும் என குடும்பத்தலைவிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.

banner

Related Stories

Related Stories