இந்தியா

”எதிர்க்கட்சிகள் பேச்சைக் கேளுங்கள் Mr.மோடி” : இணையத்தில் வைரலாகும் 3 நிமிட வீடியோ - கலக்கத்தில் பா.ஜ.க!

எதிர்க்கட்சிகளின் பேச்சைக் கேளுங்கள் என பிரதமர் மோடிக்கு வலியுறுத்தி மூன்று நிமிட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

”எதிர்க்கட்சிகள் பேச்சைக் கேளுங்கள் Mr.மோடி” : இணையத்தில் வைரலாகும் 3 நிமிட வீடியோ - கலக்கத்தில் பா.ஜ.க!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பெகாசஸ் செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலிருந்தே வலியுறுத்தி வருகின்றன. ஆனால், ஒன்றிய அரசு பெகாசஸ் குறித்து விவாதிக்க முன்வராமல் நாள்தோறும் கூட்டத் தொடரை ஒத்திவைத்து வருகிறது.

மேலும், விவசாயிகள் போராட்டம், வேளாண் சட்டம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளிட்டவைகள் குறித்து ஒன்றிய அரசு விவாதிக்காமல் எதிர்க்கட்சிகள் அமளி செய்து வருவதாக கூறி தினந்தோறும் அவையை ஒத்திவைத்து வருகிறது.

அதேவேளையில், எதிர்க்கட்சிகளின் அமளியால் கூட்டத்தொடர் நேரமும், மக்கள் வரிப் பணமும் வீணாகிறது என ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடிய இன்னும் ஒரு வாரமே இருக்கிறது. இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரெக் ஓ பிரையன் தனது ட்விட்டர் பக்கத்தில், எதிர்க்கட்சிகளின் பேச்சைக் கேளுங்கள் மோடி என பதிவிட்டு, மூன்று நிமிட வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, சிவசேனா, சி.பி.ஐ, சி.பி.ஐ.எம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் தெலுங்கானா ராஷ்ட்ரிய உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளின் தலைவர்களின் நாடாளுமன்ற உரையாடல்கள் இடம் பெற்றுள்ளன.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே ஒன்றிய அரசு பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது. நாடாளுமன்ற முடக்கத்துக்கு ஒன்றிய அரசே காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories