இந்தியா

“மின்சாரத்துறை சீர்திருத்த மசோதா மக்களுக்கு எதிரானது” : பிரதமர் மோடியை கடுமையாக சாடிய மம்தா பானர்ஜி !

ஒன்றிய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

“மின்சாரத்துறை சீர்திருத்த மசோதா மக்களுக்கு எதிரானது” : பிரதமர் மோடியை கடுமையாக சாடிய மம்தா பானர்ஜி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டத்தைக் கண்டித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாகப் போராடி வருகிறார்கள். இவர்களுடன் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்தாமல் மவுனமாக இருந்து வருகிறது.

மேலும் விவசாயிகளின் போராட்டம் குறித்து, நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒன்றிய அரசு விவாதிக்க மறுத்து வருகிறது. இந்நிலையில், மின்சார சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.

ஒன்றிய அரசின் இந்த முடிவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மின்சார சட்ட திருத்த மசோதாவைக் கைவிடக்கோரி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

“மின்சாரத்துறை சீர்திருத்த மசோதா மக்களுக்கு எதிரானது” : பிரதமர் மோடியை கடுமையாக சாடிய மம்தா பானர்ஜி !

இதுதொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில், “மின்சார சட்ட திருத்த மசோதாவைக் கடந்த ஆண்டே ஒன்றிய அரசு தாக்கல் செய்யத் திட்டமிட்டது. அப்போது மசோதாவில் உள்ள மக்கள் விரோத அம்சங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கோடிட்டுக்காட்டினோம்.

இந்த மசோதாவின் ஆபத்துகளைக் குறித்துக் கடந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி நான் உங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தேன். ஆனால், எதிர்க்கட்சிகளின் கருத்தைக் கவனத்தில் கொள்ளாமல் மசோதாவை மீண்டும் கொண்டு வருவதை அறிந்து நாள் திகைத்துப்போனேன்.

மின்சாரத் துறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து விரிவான, வெளிப்படையான விவாதங்கள் தேவைப்படுவதாகவும் இதை விரைவாகத் தொடங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories