இந்தியா

“மோடி அரசுக்கு தடுப்பூசியை உற்பத்தி செய்யும் திறன் இல்லை” : நோபல் அறிஞர் அபிஜித் பானர்ஜி கடும் தாக்கு!

நாட்டிற்குத் தேவையான அளவுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கும் திறன் ஒன்றிய அரசிடம் இல்லை என அபிஜித் பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.

“மோடி அரசுக்கு தடுப்பூசியை உற்பத்தி செய்யும் திறன் இல்லை” : நோபல் அறிஞர் அபிஜித் பானர்ஜி கடும் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் குறைந்துவந்த கொரோனா எண்ணிக்கை தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே நாட்டில் கொரோனா மூன்றாவது அலை ஆகஸ்ட் மாதத்தில் வரும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தற்போது கொரோனா அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா மூன்றாவது அலையில் இருருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கு ஒரே வழி தடுப்பூசிதான் என உலக சுகாதார அமைப்பும், விஞ்ஞானிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனால் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளது.

இருந்தபோதும், ஒன்றிய பா.ஜ.க அரசு தடுப்பூசிகள் கொள்முதல் விஷயத்தில் உரிய முறையில் செயல்படாததால் பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. மேலும் மாநில அரசுகள், ஒன்றிய அரசிடம் போராடியே தடுப்பூசிகளை பெற்று வரும் சூழலும் நிலவிவருகிறது.

“மோடி அரசுக்கு தடுப்பூசியை உற்பத்தி செய்யும் திறன் இல்லை” : நோபல் அறிஞர் அபிஜித் பானர்ஜி கடும் தாக்கு!

இந்நிலையில், பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி, மாநிலங்களுக்கு போதிய அளவில் கொரோனா தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வழங்கத் தவறிவிட்டது என பகீரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க வங்க மாநிலத்தின் கொரோனா தடுப்பு குழுவில் உறுப்பினராக அபிஜித் விநாயக் பானர்ஜி உள்ளார். இந்நிலையில், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் ஆலோசனைக்கும் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அபிஜித் பானர்ஜி,”நாட்டின் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், ஒட்டுமொத்த நாட்டிற்கும் தேவையான அளவுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் திறன் ஒன்றிய அரசிடம் இல்லை. மூன்றாவது அலையின் தாக்கத்தால் நாட்டின் ஒட்டுமொத்த ஜி.டி.பி வளர்ச்சி 7% குறைவாகச் சரிய நேரிடும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories