இந்தியா

‘இறந்தவர்’ 45 ஆண்டுகளுக்குப் பிறகு உயிருடன் திரும்பிய அதிசயம்... ஆச்சரியத்தில் மூழ்கிய கேரளா!

1976ஆம் ஆண்டு நடந்த விமான விபத்தில் பலியானதாக கருதப்பட்ட நபர் 45 ஆண்டுகளுக்கு பின் வீடு திரும்பியது அவரது குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

‘இறந்தவர்’ 45 ஆண்டுகளுக்குப் பிறகு உயிருடன் திரும்பிய அதிசயம்... ஆச்சரியத்தில் மூழ்கிய கேரளா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மும்பையில் 1976ஆம் ஆண்டு நடந்த விமான விபத்தில் பலியானதாக கருதப்பட்ட நபர் 45 ஆண்டுகளுக்கு பின் வீடு திரும்பியது அவரது குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஜ்ஜத் தங்கல் (70). இவர் தனது 25வது வயதில் கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நடிகை ராணி சந்திரா குழுவுடன் 1976ல் அபுதாபி சென்றார்.

அபுதாபியில் இருந்து இவர்களது குழுவினர் வந்த விமானம் மும்பையில் விபத்தில் சிக்கியதில் நடிகை ராணி சந்திரா உட்பட 95 பேர் உயிரிழந்தனர். கடைசி நேரத்தில் ஏற்பட்ட மாறுதல்களால் அந்த விமானத்தில் சஜ்ஜத் தங்கல் பயணிக்கவில்லை.

தன்னுடன் வந்த குழுவினர் விமான விபத்தில் பலியானதால் அதிர்ச்சியடைந்த சஜ்ஜத் மனதளவில் பாதிக்கப்பட்டார். பின் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் சிகிச்சை பெற்று மும்பை வந்து சிறு சிறு பணிகளைச் செய்து வாழ்ந்துள்ளார்.

‘இறந்தவர்’ 45 ஆண்டுகளுக்குப் பிறகு உயிருடன் திரும்பிய அதிசயம்... ஆச்சரியத்தில் மூழ்கிய கேரளா!

விமான விபத்திற்குப் பின் சஜ்ஜத் தங்கல் வீடு திரும்பாததால் அவரும் இறந்துவிட்டதாகவே அவரது குடும்பத்தினர் கருதினர். இந்நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு சஜ்ஜத்துக்கு பழைய நினைவுகள் திரும்பின.

சஜ்ஜத்தின் நிலையை அறிந்த ஒரு தொண்டு நிறுவனம் அவர் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள உதவியது. இதையத்து தனது சொந்த ஊரான சதம் கோட்டாவுக்கு சென்ற சஜ்ஜத் டங்கல், 45 ஆண்டுகளுக்குப் பின் தனது குடும்பத்தினருடன் சேர்ந்தார்.

சஜ்ஜத்தை அவரது 91 வயது தாய் பாத்திமா பீவி கண்ணீர் மல்க வரவேற்றார். அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.

இறந்ததாக கருதப்பட்டவர் 45 ஆண்டுகளுக்கு பின் உயிருடன் திரும்பிய நிகழ்வு கேரளாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories