தமிழ்நாடு

குடித்துவிட்டு வேலைக்குச் செல்லாத கணவன்... ஆத்திரத்தில் அடித்தே கொன்ற மனைவி... சேலம் அருகே கொடூரம்!

சேலம் அருகே கணவனை உருட்டுக் கட்டையால் மனைவி அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடித்துவிட்டு வேலைக்குச் செல்லாத கணவன்... ஆத்திரத்தில் அடித்தே கொன்ற மனைவி... சேலம் அருகே கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சேலம் மாவட்டம், சந்தைப்பேட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் பொன்னாரம்பட்டியை சேர்ந்த இளமதி என்பவரை காதலித்துக் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு தஷ்வீந்த் என்ற மகனும், அக்ஷூதா என்ற மகளும் உள்ளனர்.

மணிகண்டன் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். பிறகு கடந்த சில ஆண்டுகளாக இவர் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

இதனால், ஆசிரியையான இளமதி வீட்டை கவனித்து வந்துள்ளார். மேலும் மணிகண்டன் குடித்துவிட்டு அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், ஞாயிறன்று இரவு மணிகண்டன் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த இளமதி வீட்டிலிருந்த உருட்டுக் கட்டையை எடுத்து, கணவனை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் வீட்டிலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, மனைவி இளமதி காவல் நிலையம் சென்று, நடந்ததைக் கூறி சரணடைந்துள்ளார். பிறகு போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து மணிகண்டனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து இளமதியை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories