இந்தியா

'பேனர் தடை சட்டம் இருக்கும்போதே இப்படி'... புதுவை முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாள் பேனர்களால் சர்ச்சை!

புதுச்சேரி முழுவதும் முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்தாளையொட்டி பேனர்கள் வைக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'பேனர் தடை சட்டம் இருக்கும்போதே இப்படி'... புதுவை முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாள் பேனர்களால் சர்ச்சை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்தநாளையொட்டி புதுச்சேரி நகரம் முழுவதும் பேனர்கள் வைக்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்தநாள் ஆகஸ்ட் 4ஆம் வருகிறது. இதையொட்டி அவரது ஆதரவாளர்கள் புதுச்சேரி முழுவதும் பல்வேறு இடங்களில் சாலைகளை மறைத்தும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வாழ்த்து பேனர்கள் வைத்துள்ளனர்.

மேலும், 'சார்பட்டா பரம்பரை' திரைப்பட பாணியில் முதலமைச்சர் ரங்கசாமியின் படங்களைப் பேனர்களாக வைத்துள்ளனர். அதேபோல், காமராஜர், நடிகர் சிவாஜி கணேசனின் படங்கள் இடம்பெறும் வகையிலும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

'பேனர் தடை சட்டம் இருக்கும்போதே இப்படி'... புதுவை முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாள் பேனர்களால் சர்ச்சை!

புதுச்சேரியில் பேனர்கள் மற்றும் கட் -அவுட்டுகள் வைக்கக்கூடாது என்ற சட்டம் அமலில் உள்ள நிலையில், முதலமைச்சரின் பேனர்கள் நகரம் முழுவதும் வைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் முதல்வர் ரங்கசாமி தனது பதவி அதிகாரத்தை பயன்படுத்தி, தனது ஆதரவாளர்கள் மூலம் மீண்டும் புதுச்சேரியில் பேனர் கலாச்சாரத்தைக் கையில் எடுத்துள்ளாரா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories