இந்தியா

நண்பர்கள் தினம்... இவர்களை குறிப்பிட்டு மோடிக்கு வாழ்த்து தெரிவித்து கிண்டல் செய்த ராகுல் காந்தி !

பிரதமர் மோடிக்கு கிண்டல் செய்யும் விதமாக ராகுல் காந்தி நண்பர்கள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நண்பர்கள் தினம்... இவர்களை குறிப்பிட்டு மோடிக்கு வாழ்த்து தெரிவித்து கிண்டல் செய்த ராகுல் காந்தி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் இன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நண்பர்கள் ஒருவர் மாறி ஒருவர் வாழ்த்து தெரிவித்து தங்களின் அன்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களை உறுப்பினருமான ராகுல் காந்தி பிரதமர் மோடியைக் கிண்டல் செய்யும் விதமாக நண்பர்கள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராகுல்காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நண்பர்கள் தின வாழ்த்தைத் தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். இதில் பிரண்ஸ் சீரிஸின் தீம் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

மேலும் பிரதமர் மோடியுடன் தொழிலதிபர்கள் அம்பானி, அதானியின் இருக்கும் புகைப்படங்கள் இணைத்து வீடியோ அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை பதிவிட்டு, பிரதமர் மோடியைக் கிண்டல் செய்யும் விதமாக நண்பர்கள் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதத்தில் நாடாளுமன்றத்தில் நாடு நான்கு பேரால் ஆளப்படுகிறது என ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories