இந்தியா

"எல்லா மாநிலங்களிலும் பா.ஜ.கவை தோற்கடிப்பதே எங்களின் அடுத்த இலக்கு" : கொதித்தெழும் ராகேஷ் திகாயத்!

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் தேர்தல்களில் பா.ஜ.கவை தோற்கடிப்போம் என பாரதிய கிஷான் தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.

"எல்லா மாநிலங்களிலும் பா.ஜ.கவை தோற்கடிப்பதே எங்களின் அடுத்த இலக்கு" : கொதித்தெழும் ராகேஷ் திகாயத்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வந்த விவசாயிகள் விரோத வேளாண் சட்டத்தை எதிர்த்து எட்டு மாதங்களாக டெல்லி எல்லையில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் தங்களின் போராட்டத்தை விவசாயிகள் முன்னெடுத்து வருகிறார்கள். ஆனால் இவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது மோடி தலைமையிலான ஒன்றிய அரசு.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதைத் தொடர்ந்து, தங்களின் போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்தும் விதமாக, நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலிஸாரை ஏவி விவசாயிகளின் போராட்டத்தை ஒன்றிய அரசு முடக்கியது. இருப்பினும் டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறனர்.

இந்நிலையில், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிப்பதே எங்களின் அடுத்த குறி என போராட்டத்தை முன்னெடுத்து வரும் பாரதிய கிஷான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.

"எல்லா மாநிலங்களிலும் பா.ஜ.கவை தோற்கடிப்பதே எங்களின் அடுத்த இலக்கு" : கொதித்தெழும் ராகேஷ் திகாயத்!

இதுகுறித்து செய்தியாளர்களிடம் ராகேஷ் திகாயத், "மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிராகத் தீவிரப் பிரச்சாரம் செய்தோம். அதனால் மேற்குவங்கத்தில் பா.ஜ.க தோற்கடிக்கப்பட்டது. இதேபோல அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறும் உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்து பா.ஜ.கவை தோற்கடிப்போம். இந்த மாநிலங்களில் விவசாயிகளின் ஒரு வாக்குக் கூட பா.ஜ.கவுக்கு கிடைக்காது.

நாங்கள் டெல்லியில் 8 மாதங்களாகப் போராடிப் போராடிக் களைத்துப் போய்விட்டோம் என்று ஒன்றிய பா.ஜ.க அரசு கருதுகிறது. இதனால் நாங்கள் எங்கள் போராட்டத்தைக் கைவிட்டு விடுவோம் என நினைக்கிறது. ஆனால், இப்போதுதான் எங்கள் போராட்டம் விரிவடைந்துள்ளது. டெல்லியைப் போல லக்னோ சாலையையும் முடக்குவோம்" எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories