இந்தியா

#Pegasus: "ஒன்றிய அரசே... ஒட்டு கேட்பதை நிறுத்து" - ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்த மதுரை எம்.பி!

பெகாசஸ் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளார்.

#Pegasus: "ஒன்றிய அரசே... ஒட்டு கேட்பதை நிறுத்து" - ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்த மதுரை எம்.பி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ நிறுவனம் தயாரித்த பெகாசஸ் ஸ்பைவேர் மூலம், இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோரின் மொபைல் போன்கள் உளவு பார்க்கப்பட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்ட பலரின் மொபைல் போன்களும் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளதாக ஆதாரப்பூர்வமான தகவல்களைச் சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. ஆனால் இதை ஒன்றிய அரசு மறுத்து வருகிறது.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளார். இதுகுறித்து தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "ஒட்டுக்கேட்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. தனி நபர் உரிமைகளுக்கு எதிரானது. ஜனநாயகத்திற்கு எதிரானது. இஸ்ரேலிய பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் வேவு பார்க்கப்படும் 5,000 பேரின் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில், ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் , உயர்மட்ட பொறுப்புகளை வகித்தவர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் உள்ளன. இந்த பட்டியலில் இந்திய ஊடகவியலாளர்கள் 40 பேரின் பெயர்களும் இடம் பெற்றிருப்பதாகச் செய்தி. இது அதிர்ச்சி அளிக்கிற செய்தி.

இஸ்ரேலிய ஐ.பி.ஓ நிறுவனம் தாங்கள் இந்த உளவு மென்பொருளை அரசுகளுக்கு மட்டுமே விற்பனை செய்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. அப்படியெனில் வேறு யார் வேவு பார்த்திருக்க முடியும்? அரசை நோக்கியே சுட்டு விரல்கள் நீள்கின்றன. எனவே இது குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் ஒத்தி வைப்பு தீர்மானம் ஒன்றை முன்மொழிந்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories