இந்தியா

“ஆபாச படங்கள் பார்ப்பவர்களை குறிவைத்து மிரட்டி பணம் பறிக்கும் மோசடி கும்பல்”: போலிஸிடம் சிக்கியது எப்படி?

ஆபாசப் படம் பார்ப்பவர்களைக் குறிவைத்து நூதன மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரை சென்னையில் போலிஸார் கைது செய்துள்ளனர்.

“ஆபாச படங்கள் பார்ப்பவர்களை குறிவைத்து மிரட்டி பணம் பறிக்கும் மோசடி கும்பல்”: போலிஸிடம் சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் ஆபாசப் படங்கள் பார்ப்போர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், குறிப்பாகக் குழந்தைகள் ஆபாசப் படங்கள் அதிகமானோர் பார்க்கப்படுவதாக அன்மையில் தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து குழந்தைகள் ஆபாசப்படங்கள் பார்ப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலிஸார் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் ஒன்றிய அரசும் ஆபாச வலைத்தளங்களை இணையத்தில் முடக்கியது.

இந்நிலையில், சிலரின் ஐபி முகவரி, செல்போன் எண்களைச் சேகரித்து அவர்களுக்கு தொடர்பு கொண்டு, நீங்கள் அதிக நேரம் ஆபாசப்படம் பார்ப்பதாகக் கூறி அவர்களிடம் பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த சிலருக்கு, தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு நாங்கள் காவல்நிலையத்தில் இருந்து பேசுகிறோம், உங்களை விசாரிக்க வேண்டும், நீங்கள் அதிக நேரம் சமூக வலைதளங்களில் ஆபாச படங்களைப் பார்த்துள்ளீர்கள். அதிலும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட படங்களைப் பார்ப்பது குற்றம்.

“ஆபாச படங்கள் பார்ப்பவர்களை குறிவைத்து மிரட்டி பணம் பறிக்கும் மோசடி கும்பல்”: போலிஸிடம் சிக்கியது எப்படி?

இந்த குற்றத்திற்கு முதற்கட்டமாக 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறோம். இதை நீங்கள் கட்டத் தவறினால் உங்களை போலிஸார் கைது செய்வார்கள். இப்படி நடந்தால் உங்கள் குடும்பத்திற்கே அவமானமாகிவிடும். எனவே அபராதத்தைக் கட்டிவிட்டால், நாங்கள் இதை யாருக்கும் சொல்லாமல் விட்டுவிடுவோம்” என தெரிவித்துள்ளனர்.

பலரும் இதற்குப் பயந்து ஆன்லைன் வழி அபராதம் கட்டிவந்துள்ளனர். இப்படி டெல்லியைச் சேர்ந்த பலரிடம் சுமார் 34 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் டெல்லி போலிஸ்தான் அபராதத் தொகையை வசூலித்தார்களா என ஆராய்ந்தபோது தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிந்தது.

பிறகு இது குறித்து டெல்லி சைபர் கிரைம் போலிஸில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் விசாரணை நடத்தியதில் சென்னையைச் சேர்ந்த ராம்குமார், கேப்ரியல் ஜோசப், தினோ சந்த் என்பது தெரியவந்தது. இது குறித்து சென்னை போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மூன்று பேரையும் போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories