தமிழ்நாடு

வெளி மாநிலங்களிலிருந்து கடத்தி வந்து கடைகளுக்கு குட்கா சப்ளை: கையும் களவுமாக மூவரை பிடித்து போலிஸ் அதிரடி

சென்னையில் சரக்கு வாகனத்தில் குட்கா பொருட்களை கடத்தி வந்து கடைகளுக்கு விற்பனை செய்த 3 பேரை கைது செய்து வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வந்த 345 கிலோ குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்யப்பட்டது.

வெளி மாநிலங்களிலிருந்து கடத்தி வந்து கடைகளுக்கு குட்கா சப்ளை: கையும் களவுமாக மூவரை பிடித்து போலிஸ் அதிரடி
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை சைதாப்பேட்டை காவல் நிலைய பகுதிக்குட்பட்ட கடைகளில் சிலர் சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்வதாக அடையாறு துணை ஆணையாளர் அவர்களின் தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் செல்வகுமார், தலைமைக் காவலர் வெங்கடேசன், முதல் நிலைக் காவலர்கள் சண்முகம் மற்றும் பூர்ண குமார் ஆகியோர் மேற்கு ஜான்ஸ் ரோடு பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த சந்தேகத்திற்கு இடமான சரக்கு வாகனத்தை (Tata Ace) மடக்கி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வாகனத்தில் சுமார் 345 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சரக்கு வாகனத்தில் குட்கா பொருட்களை கடத்தி வந்த பள்ளிkகரனைப் பகுதியைச் சேர்ந்த மனோகரன்(42), ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன்(26) மற்றும் இசக்கி முத்து(26) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் குட்கா பொருட்கள் கடத்தி வந்த சரக்கு வாகனத்தையும் அதில் பதுக்கி வைத்திருந்த சுமார் 345 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களையும் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரையும் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் மூவரும் வெளி மாநிலங்களில் இருந்து புகையிலைப் பெருட்களை கடத்தி வந்து சரக்கு வாகனத்தில் வைத்து சைதாப்பேட்டை பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சைதாப்பேட்டை போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories