இந்தியா

3 வருடங்களாக பாலியல் தொல்லை... சிறுமியை தூக்கில் தொங்கவிட்ட இளைஞன்... கேரளாவை உலுக்கிய கொடூரச் சம்பவம்!

கேரளாவில் சிறுமியைப் பலாத்காரம் செய்து தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3 வருடங்களாக பாலியல் தொல்லை... சிறுமியை தூக்கில் தொங்கவிட்ட இளைஞன்... கேரளாவை உலுக்கிய கொடூரச் சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்திற்குட்பட்ட சுரக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூன். இவர் கடந்த 30ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். இதையடுத்து போலிஸார் இவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அர்ஜூன் தனது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் வேலைக்குச் சென்ற பிறகு, அவர்களது வீட்டில் தனியாக இருக்கும் சிறுமிக்கு இனிப்பு மற்றும் பலகாரம் வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இப்படிக் கடந்த மூன்று வருடங்களாகச் சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் சித்ரவதைக்கு உட்படுத்தியிருக்கிறார்.

இந்நிலையில், கடந்த 30ம் தேதி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். பின்னர் சிறுமி இறந்துவிட்டதாக எண்ணிய அர்ஜூன், மற்றவர்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக வீட்டிலிருந்த துப்பட்டாவில் சிறுமியை கட்டி தொங்கவிட்டுள்ளார்.

அப்போது, சிறுமிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு கண் விழித்துப் பார்த்துள்ளார். இருப்பினும் சிறுமியைக் காப்பாற்றாமல் அவள் இறக்கும் வரை அங்கேயே இருந்து, சிறுமி இறந்ததை உறுதி செய்த பிறகே, கதவை உள்பக்கமாகப் பூட்டிவிட்டு ஜன்னல் வழியாகத் தப்பிச் சென்று இருக்கிறார்.

பின்னர், சிறுமியின் பெற்றோர் குழந்தை துப்பட்டாவில் சிக்கிக் கொண்டு இறந்துவிட்டதாக நினைத்துள்ளனர். மேலும் சிறுமியின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் அர்ஜூன் ஒன்றும் தெரியாதவர் போல் பங்கேற்றுள்ளார். பின்னர் காவல்துறையினர் சந்தேகத்தின் பெயரில் விசாரணை நடத்தியதில், அர்ஜூன் போலிஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து, போலிஸார் அர்ஜூனை கொலை நடந்த வீட்டுக்கு அழைத்து வந்தபோது பொதுமக்கள் தாக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

banner

Related Stories

Related Stories