இந்தியா

பிரபல இயக்குநரின் மகன் சாலை விபத்தில் மரணம்... திரையுலகம் அதிர்ச்சி!

பிரபல கன்னட இயக்குநரின் மகன் சாலை விபத்தில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல இயக்குநரின் மகன் சாலை விபத்தில் மரணம்... திரையுலகம் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கன்னடம் மற்றும் துளு மொழி பட இயக்குநர் சூர்யாதயா பெரம்பல்லி. இவரது மகன் மயூர். இவர் தனது நண்பர் வாங்கிய புதிய இருசக்கர வாகனத்தில், பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுமியை ஏற்றிக்கொண்டு வெளியே சென்றுள்ளார்.

மயூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, அவருக்கு முன்னாள் சென்ற டேங்கர் லாரி மீது மோதியுள்ளார். இதில் மயூர் மற்றும் உடன் சென்ற சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இது பற்றி தகவல் அறிந்து போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அப்போது, மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே மயூர் உயிரிழந்தார். சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில் மயூர் 300 சிசியில் வேகமாக சென்றதே விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. மயூரின் மரணம் அறிந்து கன்னட திரையுலகமே அதிர்ச்சியடைந்துள்ளது.

பிரபல இயக்குநரின் மகன் சாலை விபத்தில் மரணம்... திரையுலகம் அதிர்ச்சி!

இயக்குநர் சூர்யோதயா பெரம்பல்லி இயக்கிய துளு படமான 'Deyi Baidethi - Gejjegiri Nandanodu'-க்கு மூன்று மாநில விருதுகள் கிடைத்துள்ளன. அதேபோல் இவர் இயக்கிய கன்னட படம் சால்ட் கடந்த பிப்ரவரியில் ரிலீஸானது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன்பு கன்னட நடிகர் சஞ்சரி விஜய் விபத்தில் உயிரிழந்தார். அதேபோல் கன்னட நடிகரும் பா.ஜ.க தலைவருமான ஜாகேஷின் மகன் யதிராஜ் விபத்தில் சிக்கி காயமடைந்தார். தற்போது மயூர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கன்னட திரையுலகம் தொடர்புடைய மூன்று சாலை விபத்துகள் நடந்திருப்பது நடிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories