இந்தியா

"கொரோனா நெருக்கடியிலும் ஆட்சி வெறி பிடித்து அலையும் பா.ஜ.க" : உத்தவ் தாக்கரே கடும் தாக்கு!

கொரோனா தொற்று காலத்திலும் பா.ஜ.க ஆட்சி வெறி பிடித்து அலைவதாக முதல்வர் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார்.

"கொரோனா நெருக்கடியிலும் ஆட்சி வெறி பிடித்து அலையும் பா.ஜ.க" : உத்தவ் தாக்கரே கடும் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவிலேயே கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் மகாராஷ்டிர மாநிலம் தான் கடும் பாதிப்புகளைச் சந்தித்தது. இம்மாநிலத்தில் தான் தினசரி கொரோனா பாதிப்பு 80 ஆயிரத்திற்கு மேல் பதிவானது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த முதல்வர் உத்தவ் தாக்கரே மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது.

முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளால் மகாராஷ்டிர மாநிலத்தில் தொற்று எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. இருந்தபோதும் 18 மாவட்டங்களுக்கு மட்டுமே தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே காணொலி மூலம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "மகாராஷ்டிர மாநிலம் கொரோனாவால் கடுமையான பாதிப்பைச் சந்தித்து தற்போது மீண்டு வருகிறது. கொரோனாவில் இருந்து மக்கள் உயிர்களைக் காப்பாற்றுவதே அரசின் முக்கியமான பணி. எனவே இவர்களைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.

ஆனால், இந்த நெருக்கடியான காலத்திலும் கூட சில கட்சிகள் பா.ஜ.கவை அரியணை ஏறவைக்க முயல்கிறார்கள். எப்படியாவது ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என சதித்திட்டம் தீட்டிவருகிறார்கள். ஆனால் அவர்கள் எண்ணம் ஈடேறப்போவதில்லை. மக்கள் அவர்களை ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்.

இந்த கொரானா காலத்திலும் கூட அதிகார வெறிபிடித்து அலைவது, சட்ட ஒழுங்கை பாதிக்க வழிவகுக்கும். முதல்வராக வேண்டும் என்பது எப்போதும் எனது இலக்காக இருந்தது இல்லை. சிவசேனாவை சேர்ந்த தொண்டனை முதல்வராக்குவேன் என எனது தந்தைக்குச் செய்து கொடுத்த சத்தியத்தை நான் இன்னும் நிறைவேற்றவில்லை.

நான் அரசியலில் ஈடுபாடு கொண்டு வரவில்லை. தந்தைக்கு உதவியாக இருக்கவே அரசியலுக்கு வந்தேன். எனது ஆட்சியின் போது நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. பொறுப்புகளை விட்டு நான் ஓடியது கிடையாது. முதல்வராக என்னால் செய்ய முடிந்ததைச் செய்து கொண்டு இருக்கிறேன்." என்றார்.

banner

Related Stories

Related Stories