இந்தியா

“மோடியால் ஏழையான 23 கோடி மக்கள்” : ஒன்றிய அரசு மீது ப.சிதம்பரம் பகீர் குற்றச்சாட்டு!

இந்தியாவில் இருக்கும் ஏழை வர்க்கத்திற்கு மோடி அரசு என்ன செய்திருக்கிறது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

“மோடியால் ஏழையான 23 கோடி மக்கள்” : ஒன்றிய அரசு மீது ப.சிதம்பரம் பகீர் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அவலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் அலை பரவியதிலிருந்தே ஒன்றிய அரசு கொரோனா தொற்றைச் சரியாகக் கையாளாததால் இந்தியா பெரும் இழப்பைச் சந்தித்து வருகிறது என்ற குற்றச்சாட்டுப் பரவலாகக் கூறப்படுகிறது.

இந்த நெருக்கடியான காலத்தில் ஒன்றிய அரசின் தவறான கொள்கையால் 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஜி.டி.பி -7.3 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. மேலும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்தே பொருளாதாரம் கடும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.

இந்நிலையில், 23 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டதற்கு மோடி அரசின் தவறான கொள்கைகளே காரணம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ப.சிதம்பரம் தனது ட்விட்டரில், "கொரோனா பெருந்தொற்றின் பொருளாதார விளைவுகளை மத்திய அரசு கையாண்ட விதத்தை நான் தொடர்ந்து விமர்சித்து வருகிறேன். இந்தப் பெருந்தொற்று கீழ் அடுக்கு நடுத்தர மக்களை (lower middle class) எப்படிப் பாதித்திருக்கிறது என்று ஒரு அறிவு பூர்வமான ஆய்வை ஒரு வல்லுநரின் துணையுடன் நடத்தினேன்

1004 நபர்கள் ஆய்வில் கலந்து கொண்டார்கள். கடந்த 14 மாதங்களில் தங்கள் மாத வருமானம்/ ஊதியம் குறைந்திருப்பதாக 880 நபர்கள் பதிலளித்தார்கள். 758 நபர்கள் தங்கள் குடும்பச் செலவு கூடியிருப்பதாகச் சொன்னார்கள்.

725 நபர்கள் தங்கள் சேமிப்பிலிருந்து பணம் எடுத்திருக்கிறார்கள். 329 நபர்கள் தங்கள் உடமைகளை விற்றனர் அல்லது அடமானம் வைத்திருக்கிறார்கள் 702 நபர்கள் கடன் வாங்கியிருக்கிறார்கள்

இந்தக் கீழ் அடுக்கு நடுத்தர மக்கள் (lower middle class) ஏழைகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் இவர்களுக்கும் இவர்களை விட வறுமையில் உள்ள எழை வர்க்கத்திற்கும் மோடி அரசு என்ன செய்திருக்கிறது?

23 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே தள்ளப்பட்டதற்கு மோடி அரசின் இயலாமையும் தவறான கொள்கைகளுமே காரணம் என்ற குற்றச்சாட்டு நியாயம் தானே?" என பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories