இந்தியா

மோடி அரசின் தகுதியற்ற நிர்வாக திறன்.. GDP -7.3% சரிவு : 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியை சந்தித்த இந்தியா!

2020 -21ம் நிதியாண்டு, இருண்ட ஆண்டு என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

மோடி அரசின் தகுதியற்ற நிர்வாக திறன்.. GDP -7.3% சரிவு : 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியை சந்தித்த இந்தியா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2020 -21ம் நிதியாண்டில் 7.3 சதவீதம் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய அரசின் வருவாய் - செலவின விவரத்தை கணக்குத் தணிக்கை அலுவலகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும், கடந்த நிதியாண்டில் 4 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி, தற்போது கடும் சரிவை சந்தித்துள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேபோல், ரிசர்வ் வங்கியும், மத்திய புள்ளியியல் துறையும் 8 சதவீதம் வரை வீழ்ச்சி இருக்கும் என கணித்த நிலையில், சற்று குறைவாகவே பொருளாதார வளர்ச்சி சரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதும் இந்த சரிவு கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத ஒன்று என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நிதியாண்டு இருண்ட ஆண்டு என்றும் இதற்கு ஒன்றிய அரசின் செயல்பாடுகளே காரணம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஜி.டி.பி சரிவு குறித்து காணொலி காட்சி மூலம் நடைபெற்ற கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசுகையில், “பெருந்தொற்றால் தான் இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் பெரும் சரிவு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இதை மேலும் மோசமாக்கியது ஒன்றிய பா.ஜ.க அரசின் தகுதியற்ற, திறமையற்ற பொருளாதார நிர்வாகம்தான் காரணம்.

2018 - 2019ம் நிதியாண்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை விட 2020 - 2021ம் நிதியாண்டில் ஜி.டி.பி. குறைந்துவிட்டது. கடந்த 40 ஆண்டுகளில் 2020 - 2021ம் நிதி ஆண்டு தான் இந்தியப் பொருளாதாரத்தின் இருண்ட காலமாகும். 2020 - 2021ம் நிதி ஆண்டின் 4 காலாண்டு பொருளாதார நிலையே வீழ்ச்சியைத் தெளிவாகக் காட்டுகிறது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2018-19 ஆண்டில் ரூ.140 லட்சம் கோடியிலிருந்து 2020-21ம் ஆண்டு ரூ.135 லட்சம் கோடியாகக் குறைந்துவிட்டது. அதேபோல், கடந்த ஆண்டை ஒப்பிடும்போது தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவீதம் குறைந்துள்ளது. மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தனிநபர்கள் ஏழ்மை நிலையில் அதிகரித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories