இந்தியா

இந்தி, ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும்; மலையாளத்தில் பேசத் தடை; டெல்லி ஜிப்மர் சுற்றறிக்கையால் சர்ச்சை!

மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி ஜிப்மர் அறிக்கை விடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 இந்தி, ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும்; மலையாளத்தில் பேசத் தடை; டெல்லி ஜிப்மர் சுற்றறிக்கையால் சர்ச்சை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லி ஜிப்ம்பர் மருத்துவமனையில் செவிலியர்கள் மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளைப் பேச தடை. இந்தி, ஆங்கிலம் மட்டுமே பேச வேண்டும். இல்லை என்றால் தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற சுற்றரிக்கையால் சர்ச்சை எழுந்துள்ளது.

டெல்லியில் ஜி.பி.பந்த் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் நேற்று ஒரு சுற்றரிக்கை வெளியிட்டுள்ளது. அதில் செவிலியர்கள் பணியிடத்தில் மலையாள மொழி பேசக் கூடாது. இந்தி, ஆங்கிலம் மட்டுமே பேச வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

 இந்தி, ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும்; மலையாளத்தில் பேசத் தடை; டெல்லி ஜிப்மர் சுற்றறிக்கையால் சர்ச்சை!

இந்த சுற்றறிக்கை மலையாளம், தமிழ், தெலுங்கு பேசும் தென்னிந்திய செவிலியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. டெல்லி மருத்துவமனைகளில் கேரளம், தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்த மாநிலங்களைச் சேர்ந்த செலிவியர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகிறார்கள்.

தங்களிடைய தாய்மொழியில் ஒருவருக்கொருவர் பேசக் கூடாது என்று தடை விதித்திருப்பதற்கு இந்த செவிலியர்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories