இந்தியா

“காலில் விழுந்தால்தான் உதவுவேன் என்றால் அதற்கும் தயார்” - மோடி அரசுக்கு மம்தா பானர்ஜி பதில்!

தங்களுக்கு கிடைத்த தோல்வி காரணமாக என்னை இழிவுபடுத்த வேண்டாம் என மோடி அரசுக்கு மம்தா பானர்ஜி பதிலளித்திருக்கிறார்.

“காலில் விழுந்தால்தான் உதவுவேன் என்றால் அதற்கும் தயார்” - மோடி அரசுக்கு மம்தா பானர்ஜி பதில்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

வங்கக்கடலில் உருவான யாஸ் புயலால் ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் மோடி நேற்று பார்வையிட்டார். பின்னர் புயல் சேதங்கள் தொடர்பாக மேற்குவங்கம் மற்றும் ஒடிசா மாநில முதல்வர்களை அவர் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்தக் கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை. பிரதமர் மோடியை சந்தித்து, யாஸ் புயல் பாதிப்புகள் குறித்து, 15 நிமிடங்கள் விளக்கிய மம்தா பானர்ஜி கூட்டத்தில் பங்கேற்காமல் புறப்பட்டுச் சென்றார்.

இதற்கு பா.ஜ.க தலைவர் நட்டா, மேற்கு வங்க ஆளுநர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்ததால் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாகப் பேசியுள்ள மம்தா பானர்ஜி, “நான் புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட முன்னதாகவே திட்டமிட்டுவிட்டேன். ஆனால், பிரதமர் திடீரென அவரது பயணத்தைத் திட்டமிட்டார். அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக பிரதமர் இந்தப் பயணத்தைத் திட்டமிட்டிருக்கிறார். அவர், பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினரையே சந்தித்தார்.

இதில் எங்கள் தவறு என்ன என நீங்கள்தான் கூற வேண்டும். என்னை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு தவறான செய்திகளை அளித்து வருகிறது. வெள்ள சேதம் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் பா.ஜ.க நிர்வாகிகளுக்கும் என்ன வேலை?

எனது காலில் விழுந்தால்தான் மேற்கு வங்கத்திற்கு உதவுவேன் என பிரதமர் கூறினால், அதனைச் செய்ய நான் தயார். ஆனால், என்னை அவமானப்படுத்தாதீர்கள்.

சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில், எங்களுக்கு மகத்தான வெற்றி கிடைத்ததால், நீங்கள் இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள். எல்லாவிதமாகவும் எதிர்ப்பைக் காட்டி தோற்றுவிட்டதால் இப்படிச் செய்கிறீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories