இந்தியா

“GST-யில் இருந்து விலக்கு அளிக்க முடியாது” : மம்தா கோரிக்கையை இரக்கமின்றி நிராகரித்த நிர்மலா சீதாராமன்!

ஆக்சிஜன்மற்றும் கொரோனா மருந்துகளுக்கு ஜி.எஸ்.டியில் இருந்து விளக்கு அளிக்க வேண்டும் என பிரதமருக்கு மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

“GST-யில் இருந்து விலக்கு அளிக்க முடியாது” : மம்தா கோரிக்கையை இரக்கமின்றி நிராகரித்த நிர்மலா சீதாராமன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் இந்தியா சிக்கித் திணறி வருகிறது. தினந்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்திற்கு மேல் பதிவாகி வருகிறது. அதேபோல் உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தையும் கடந்து உள்ளது. இது மக்களை அச்சமடையச் செய்துள்ளது.

மேலும் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், மேற்குவங்கம், குஜராத், டெல்லி, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிதீவிரமாகப் பரவி வருகிறது. இதனால் இம்மாநிலங்களில் மருத்துவமனைகளில் தொற்று நோயாளிகளுக்குப் படுக்கை, ஆக்சிஜன் வசதிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் வேமாக பரவ துவங்கியபோது மேற்கு வங்க மாநிலத்தில் எட்டு கட்டமாகத் தேர்தல் நடைபெற்றதால், தற்போது இம்மாநிலத்தில் கொரோனா தனது கோரமுகத்தைக் காட்டியுள்ளது.

இந்நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதில், “ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் கோவிட் தொடர்பான மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி வரி, சுங்க வரி மற்றும் ஏனைய வரிகள தள்ளுபடி செய்யுமாறும், இலவசமாக தடுப்பூசி போட அனுமதிக்குமாறும், மருத்துவ ஆக்சிஜன ஒதுக்குவதை உறுதி செய்யுமாறு” கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையடுத்து, தடுப்பூசிகளுக்கு 5 சதவீத வரியும், மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு 12 சதவீத வரியும் அவசியம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், இந்த பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து முழுவிலக்கு அளித்தால், அவற்றின் உற்பத்தியாளர்கள் தாங்கள் செலுத்திய உள்ளீட்டு வரியை ஈடுசெய்ய முடியாத நிலை ஏற்படும்.

அப்போது, வேறு வழியின்றி அவர்கள் தடுப்பூசி உள்ளிட்ட பொருட்களின் விலையை உயர்த்தி, பொதுமக்கள் மீது அந்த சுமையை திணிப்பார்கள். அதனால், பொருட்கள் விலை உயர்ந்து பொதுமக்கள்தான் பாதிக்கப்படுவார்கள் என்றும் மத்திய நிதியமைச்சர் கருத்துதெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories