இந்தியா

இந்தியாவில் குறையும் கொரோனா தொற்று.. வேகம் எடுக்கும் உயிரிழப்பு; மீண்டும் ஒரே நாளில் 4,157 பேர் பலி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,08,921 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் குறையும் கொரோனா  தொற்று.. வேகம் எடுக்கும் உயிரிழப்பு; மீண்டும் ஒரே நாளில் 4,157 பேர் பலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையில் மே மாதம் துவக்கத்தில் 4 லட்சத்திற்கு மேல் தொற்று பதிவாகி புதிய உச்சத்தை எட்டியது. பின்னர் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று எண்ணிக்கை 4 லட்சத்திற்குக் கீழ் படிப்படியாகக் குறைந்து இன்று புதிதாக 2,08,921 பேருக்குத் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

அதேபோல் உயிரிழப்பு எண்ணிக்கையும் தினந்தோறும் 4 ஆயிரத்திற்கு மேல் பதிவாகிவந்தது. நேற்று ஒருநாள் மட்டும் 3,511 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை குறையும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் 4,157 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் தொற்று எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வந்தாலும் இன்னும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்தே வருவது மக்களை அச்சமடைய செய்துள்ளது.

கொரோனா தொற்றால் இதுவரை 3,11,388 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் 2,71,57,795 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொற்றிலிருந்து 2,43,50,816 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories