இந்தியா

“மோடியின் மாஸ்டர்ஸ்ட்ரோக்” - வெற்று பிம்ப பிரதமரை பங்கமாக கலாய்த்த 56 பக்க புத்தகம்!

பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகள் குறித்த வெற்றுப் புத்தகம் அமேசானில் வெளியிடப்பட்டுள்ளது.

“மோடியின் மாஸ்டர்ஸ்ட்ரோக்” - வெற்று பிம்ப பிரதமரை பங்கமாக கலாய்த்த 56 பக்க புத்தகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கடந்த 2014 மே 26ஆம் தேதி, பா.ஜ.க அரசு ஆட்சிப் பொறுப்பு ஏற்று நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராகப் பதவி ஏற்றார். இந்தியாவின் பிரதமராக நாளையுடன் ஏழு ஆண்டுகளை நிறைவு செய்கிறார் மோடி.

இந்த ஏழாண்டுகால ஆட்சியில் மக்களை சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாக்கிவிட்டது மோடி அரசு. இந்திய அரசியலமைப்புச் சட்டமும், இந்தியாவின் பெருமையான ஜனநாயகமும் பா.ஜ.க ஆட்சியில் பெரும் அடியைச் சந்தித்திருக்கின்றன.

மக்களுக்காகச் செயல்படாமல், தமது இந்துத்வ கொள்கையைத் திணித்து நாட்டையே துண்டாடத் துடிக்கும் அரசாக இருக்கிறது ஆர்.எஸ்.எஸ்ஸின் கைப்பாவையான மோடி அரசு.

பா.ஜ.க அரசின் தவறான கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்குச் சென்றுகொண்டிருக்கிறது. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்றவற்றால் பொதுமக்களும், தொழில் நிறுவனத்தினரும் மிகக் கடுமையான துன்பங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

கொரோனா எனும் இந்தப் பேரிடர் காலத்திலும், மக்களைக் காக்கத் தவறி தோல்வி முகத்தைக் காட்டியிருக்கிறார் மோடி. பொய்களால் கட்டமைக்கப்பட்ட மோடி எனும் பிம்பம் சிதறி வீழ்ந்துகொண்டிருக்கிறது.

“மோடியின் மாஸ்டர்ஸ்ட்ரோக்” - வெற்று பிம்ப பிரதமரை பங்கமாக கலாய்த்த 56 பக்க புத்தகம்!

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகள் குறித்த வெற்றுப் புத்தகம் அமேசானில் வெளியிடப்பட்டுள்ளது. இது பலத்த கிண்டலுக்குள்ளாகியுள்ளது.

பெரோஸ்கர் பக்த் என்பவர் அமேசானில் "மாஸ்டர்ஸ்ட்ரோக்: இந்தியாவின் வேலைவாய்ப்பு வளர்ச்சியில் பிரதமருக்கு உதவிய 420 ரகசியங்கள்!" என்ற தலைப்பில் ‘56’ பக்கங்கள் கொண்ட புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

ஆனால், அந்தப் புத்தகத்தின் எல்லா பக்கங்களும் வெற்றுப் பக்கங்களாக உள்ளன. பிரதமர் மோடியை கேலி செய்யும் வகையில் இவ்வாறு அவர் புத்தகம் வெளியிட்டுள்ளார். இந்தப் புத்தகம் சிறப்பாக உள்ளதாக பலரும் அமேசானில் கிண்டலாக ரிவ்யூ செய்துள்ளனர்.

மோடியை கிண்டல் செய்யும் விதமாக வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்ட நிலையில், தற்போது இப்புத்தகம் அமேசான் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories