இந்தியா

“கொரோனாவை குணப்படுத்துகிறதா?” - கோமிய பாட்டிலுடன் சுகாதார அமைச்சருக்கு கடிதம் அனுப்பிய காங். எம்.எல்.ஏ!

கோமியம் கொரோனாவை குணப்படுத்துகிறதா என்று விளக்கம் கேட்டு கோமிய பாட்டிலுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம்.

“கொரோனாவை குணப்படுத்துகிறதா?” - கோமிய பாட்டிலுடன் சுகாதார அமைச்சருக்கு கடிதம் அனுப்பிய காங். எம்.எல்.ஏ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கோமியம் கொரோனாவை குணப்படுத்துகிறதா என்று விளக்கம் கேட்டு கோமிய பாட்டிலுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ கடிதம் அனுப்பியுள்ளார்.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையால் இந்தியா பேரழிவைச் சந்தித்து வருகிறது. மருத்துவமனைகளில் படுக்கை, ஆக்சிஜன், மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இந்தியாவில் கொரோனா தொற்றைத் தடுத்து உயிரிழப்புகளைத் தடுப்பதற்காக அறிவியல் பூர்வமாக சோதனை செய்யப்பட்ட கோவாக்சின், கோஷீல்டு போன்ற தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே பா.ஜ.கவின் பல்வேறு எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் தொடர்ச்சியாகக் கோமியம் குடித்தால், மாட்டுச் சாணம் உண்டால் கொரோனா வாரது எனப் பேசி, மூட நம்பிக்கையை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் மாநிலமான குஜராத்தில் கூட மாட்டுச் சாண குளியல் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. பா.ஜ.கவினரின் இந்த செயலை உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய மருத்துவ கழகம் கண்டித்தாலும், பிரதமர் மோடி 'இப்படிச் செய்வது தவறு' எனக் கூறாமல் மவுனம் காத்தே வருகிறார்.

“கொரோனாவை குணப்படுத்துகிறதா?” - கோமிய பாட்டிலுடன் சுகாதார அமைச்சருக்கு கடிதம் அனுப்பிய காங். எம்.எல்.ஏ!

சமீபத்தில், மத்திய பிரதேசத்தின் போபால் மக்களவை தொகுதி பா.ஜ.க எம்.பி. பிரக்யா தாக்கூர் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், “கொரோனாவால் பாதிக்கும் சுவாசக்குழாயை பசுவின் கோமியம் குணப்படுத்தும். எனவே, பசுவின் கோமியத்தை தினமும் அருந்த வேண்டும். நான் கோமியம் குடிப்பதால் கொரோனா தொற்று ஏற்படவில்லை” என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு, போபாலின் தென்மேற்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ பி.சி.சர்மா எழுதியுள்ள கடிதத்தில், பசுவின் கோமியம் கொரோனாவை குணப்படுத்துகிறதா என்று தெளிவுபடுத்துமாறு கோரியுள்ளார்.

அதில், “கொரோனாவை கோமியம் குணப்படுத்தும் என்கிற கருத்தை இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்), டி.ஆர்.டி.ஓ ஆகிய நிறுவனங்கள் ஏற்றுக்கொள்கிறதா” என்று கேட்டுள்ள பி.சி.சர்மா, ஒரு பாட்டிலில் கோமியத்தையும் நிரப்பி கடிதத்துடன் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “கோமியம் கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறிய பிரக்யா தாக்கூர், பா.ஜ.க எம்.பி. என்பதால் அவரது கருத்தை புறக்கணிக்க முடியாது. பசுவின் பால் மிகவும் சத்தான உணவு என்பதையும் ஒப்புக்கொள்கிறேன். பசுவின் கோமியமும், சாணமும் ஆன்மீக உணர்வோடு தொடர்புடையவை. ஆனால், இதை வைத்து நம் நாட்டின் அப்பாவி மக்களை தவறாக வழிநடத்தக் கூடாது. எனவேதான் அதை பாட்டிலில் நிரப்பி தங்களுக்கு அனுப்பியுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories