இந்தியா

300 பேருக்கு இறுதிச்சடங்கு செய்த மனிதநேயர்... கொரோனாவுக்கு பலியான சோகம்!

கொரேனாவால் உயிரிழந்த 300க்கும் மேற்பட்டோருக்கு இறுதிச்சடங்கு செய்தவர் கொரேனாவால் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

300 பேருக்கு இறுதிச்சடங்கு செய்த மனிதநேயர்... கொரோனாவுக்கு பலியான சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா முதல் அலையின் போது உயிரிழந்தவர்கள் சடலங்களை உறவினர்களிடம் கொடுக்காமல் மருத்துவமனை ஊழியர்களே இறுதிச் சடங்குகளைச் செய்துவந்தனர்.

ஆனால் தற்போது கொரோனா இரண்டாவது அலையில் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படும் நிலையிலும், தன்னார்வலர்களும், காவலர்களும், இஸ்லாமிய அமைப்புகளும் கொரோனா தொற்று ஆபத்துக்கு மத்தியிலும் தொற்றால் உயிரிழந்தவர்கள் சடலங்களுக்கு உரிய முறையில் இறுதிச்சடங்கு செய்துவருகின்றனர்.

இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்து வந்த நகராட்சி ஊழியர் ஒருவர் கொரோனா பாதித்து உயிரிழந்திருப்பது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம், ஹிசாரில் மாநகராட்சி பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார். இவர் கொரோனாவால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கும் செய்யும் குழுவின் தலைவராக இருந்துவந்தார்.

300 பேருக்கு இறுதிச்சடங்கு செய்த மனிதநேயர்... கொரோனாவுக்கு பலியான சோகம்!

இவர் கடந்த ஆண்டு கொரோனா பரவல் துவங்கியதிலிருந்து தற்போது அவரை கொரோனாவல் உயிரிழந்த 300க்கும் மேற்பட்டோருக்கு இறுதிச் சடங்குகளை செய்துள்ளார்.

இந்நிலையில், பிரவீன் குமாருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பிறகு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மே 17ம் தேதி சிகிக்கை பலனின்றி உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு நகராட்சி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories