இந்தியா

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பலி - ஒரேநாளில் 2.81 லட்சம் பேர் பாதிப்பு: வேடிக்கை பார்க்கும் மோடி அரசு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.81 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பலி - ஒரேநாளில் 2.81 லட்சம் பேர் பாதிப்பு: வேடிக்கை பார்க்கும் மோடி அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் குறைந்து வந்திருந்த கொரோனா தொற்று கடந்த ஏப்ரல் மாதம் திடிரென அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த ஆண்டு பரவிலின் போது ஏற்பட்டதை விட கூடுதலான தொற்று எண்ணிக்கை பதிவாகி வந்தது. அதன்படி கடந்த ஏப்ரல் 21ம் தேதி முதல் முறையாக 3 லடதத்தை தாண்டியது.

பின்னர் இந்த எண்ணிக்கை அதிகரித்து ஏப்ரல் 30ம் தேதி 4 லட்சத்தை தாண்டியது. பிறகு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு 4.01 லட்சத்திற்கு மேல் கொரோனா தொற்று பதிவாகி வந்தது. இதையடுத்து சற்று எண்ணிக்கை குறைந்தது. ஆனால், மே 7 ம் தேதி மீண்டும் அதிக உச்சமாக 4.14 லட்சமாகப் பதிவானது.

அதன் பின்னர் 4 லட்சத்திலிருந்து கொரோனா எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. கடந்த நான்கு நாட்களாக 3 லட்சத்திற்கு மேல் பதிவாக வந்த கொரோனா தொற்று இன்று 2,81,386 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பலி - ஒரேநாளில் 2.81 லட்சம் பேர் பாதிப்பு: வேடிக்கை பார்க்கும் மோடி அரசு!

ஆனால், கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வந்தாலும், உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்திற்கு மேல் பதிவாகி வருகிறது. இதற்குக் காரணம் மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கை வசதிகள் கிடைக்காமல் இருப்பதால் உயிரிழப்பு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து கொரோனா எண்ணிக்கை குறைந்து வந்தால், உயிரிழப்பு எண்ணிக்கையும் குறையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

banner

Related Stories

Related Stories