முரசொலி தலையங்கம்

“மாநில அரசுகளின் கோரிக்கைகளை மோடி அரசு நிறைவேற்றினால்தான் கொரோனாவிலிருந்து மீண்டெழ முடியும்” : முரசொலி

மாநில அரசுகளின் கோரிக்கைகளை மோடி அரசு நிறைவேற்றினால்தான் கொரோனாவிலிருந்து மீண்டெழ முடியும் என முரசொலி தலையங்கம் வலியுறுத்தியுள்ளது.

“மாநில அரசுகளின் கோரிக்கைகளை மோடி அரசு நிறைவேற்றினால்தான் கொரோனாவிலிருந்து மீண்டெழ முடியும்” : முரசொலி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் முன்னரே, கொரோனாவிலிருந்து எப்படி மீண்டெழுவது என்பது பற்றியே முதன்முதல் அதிகாரிகளோடு கலந்துரையாடினார். கொரோனா ஒழிப்புப் பணி மட்டுமே இன்றையதினம் அரசுக்கு இருக்கிற ஒரு புள்ளித் திட்டமாகும். தமிழ்நாடு, ஆந்திரம், அஸ்ஸாம், இமாச்சலப்பிரதேசம், கேரளம், அரியானா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், இராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கிராமங்களிலும் கொரோனா ஊடுருவிவிட்டது எனும் தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இதற்கு உண்டான தடுப்பு நடவடிக்கைகள் அந்தந்த மாநில அரசுகளால் எடுக்கப்பட்டு வருகின்றன.

இரண்டாவது கொரோனா அலை தொடங்கியதிலிருந்து மத்திய அரசின் அறிவுரை வழங்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. இதனால் மக்களுக்கு சந்தேகங்கள்தான் அதிகமாகின்றன. தைரிய மூட்டலும், தெம்பும், கொரோனாவிலிருந்து மீண்டெழுவதற்கான நம்பிக்கையும் தான் மத்திய அரசின் அறிவுரையிலிருந்து மக்களுக்கு எழ வேண்டும். தடுப்பூசிகளின் பற்றாக்குறை ஏற்பட்டதற்கு மத்திய அரசே காரணம் என்கிறார்கள். முதலில் வெளிநாட்டிற்கு நிரம்ப தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுவிட்டன. ஆனால், இப்போதோ தடுப்பூசிகள், அடுத்த வாரம் முதல் கிடைக்கும் என்கிறார்கள். ஆனால், கோவிஷீல்டு தடுப்பூசியின் 2ஆவது தவணைக்கான இடைவெளி 12 வாரங்களிலிருந்து 16 வாரங்கள் வரை அதிகரித்து இருக்கிறார்கள். ஏன் அவ்வளவு காலம் நீட்டித்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஏற்கனவே போடப்பட்ட ஊசிகளுக்கு தவணைகள் செலுத்தப்பட வேண்டி இருக்கிறது. கோவிஷீல்டைத்தான் நிரம்ப தடுப்பூசி போடப் பயன்படுத்துகிறார்கள். அதை 2ஆவது தவணைக்கு அதிக காலம் நீட்டிப்பது என்பது அறிவியல் காரணமா? அல்லது உற்பத்தி போதவில்லையா? - என்றும் நமக்குத் தெரியவில்லை. இப்போது இன்னொரு செய்தி வெளியாகி இருக்கிறது. அதாவது, கொரோனாவின் மோசமான பிடியில் சிக்கிய 100 மாவட்டக் கலெக்டர்களுடன் மோடி பேசப்போகிறார் என்பதே!

“மாநில அரசுகளின் கோரிக்கைகளை மோடி அரசு நிறைவேற்றினால்தான் கொரோனாவிலிருந்து மீண்டெழ முடியும்” : முரசொலி

கொரோனா பற்றிய செய்திகளை மத்திய அரசின் சார்பாக வெளியிடப்பட வேண்டும் என்றால் பிரதமர், மத்திய சுகாதார அமைச்சர், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆகியோர் மட்டுமே வெளியிட வேண்டும். மூவரோ அல்லது தனித்தனியாகவோ அறிக்கை வெளியிட்டாலும் அவை ஒரே கருத்தை எதிரொலிப்பவையாக இருக்க வேண்டும். அப்போதுதான் குழப்பம் இல்லாமல் கருத்துகள் அமைந்து இருக்கும். மத்திய அரசுக்கு மக்களோடு நேரடி தொடர்பு இல்லை. மாநில அரசுகளே களத்தில் நின்று மக்களின் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. மக்களைச் சந்தித்து வருகிறது. ஆகவே, கொரோனா சம்பந்தமாக மாநில அரசு எழுப்பும் கோரிக்கைகளை ஏற்று உடனடியாக மத்திய அரசு நிறைவேற்றித் தர வேண்டும். சமீபத்தில் பிரதமர் நரேந்திரமோடிக்கு எழுதப்பட்ட இரண்டு கடிதங்கள் மிக முக்கியமானவை ஆகும்.

(1) புதிய நாடாளு மன்றம் கட்டடம் கட்டும் “சென்ட்ரல் விஸ்டா” திட்டத்தை நிறுத்தி விட்டு இலவச தடுப்பூசி திட்டத்தை உடனடியாக தொடங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட கடிதம் ஆகும். இந்தக் கடிதம் இன்னும் பல கோரிக்கைகளை உள்ளடக்கியதாகும்.

இக்கடிதத்தில் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மதச் சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடா, தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனாவின் உத்தவ்தாக்கரே, திரிணாமுல் காங்கிரஸ் மம்தா பானர்ஜி, ஜார்க்கண்ட் முத்தி மோர்சா ஹேமந்த் சோரன், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தேஜஸ்வி யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்டு கட்சியின் சீதாராம் யெச்சூரி ஆகிய 12 பேர் கையெழுத்திட்டு இருக்கின்றனர்.

(2) நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதம் என்ன கருத்தை வெளிப்படுத்துகிறது என்றால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் தடுப்பூசி மற்றும் மருந்துக்கு ஜி.எஸ்.டி. விலக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதே ஆகும்.

“மாநில அரசுகளின் கோரிக்கைகளை மோடி அரசு நிறைவேற்றினால்தான் கொரோனாவிலிருந்து மீண்டெழ முடியும்” : முரசொலி

ஆக, பிரதமருக்கு எதிர்க்கட்சிகள் பன்னிரண்டும், தலைவர் மு.க.ஸ்டாலினின் மற்றொரு கடிதமும் கொரோனா சம்பந்தப் பட்டவையே ஆகும். ஏன் எல்லாமே கொரோனாவைப் பற்றியே இருக்கின்றன? நாம் மேலே எடுத்துக்காட்டியபடி பல மாநிலங்களில் கொரோனாவின் தாக்குதல் மிகுந்த மோசமாக இருந்து வருகிறது. ஆனால் போடப்படும் தடுப்பூசிகள் போதுமானவையாக இல்லை.

ஏப்ரல் 12ம் தேதி 37 இலட்சம் போடப்பட்டிருந்த தடுப்பூசி மே 12 ஆம் தேதி 24 இலட்சம் பேருக்கு குறைந்துவிட்டது. மத்திய அரசு பெரும்பாலான கொரோனா பொறுப்புகளை மாநில அரசிடமே விட்டு இருக்கிற நிலையில், அதற்குத் தேவையான சம்பந்தப்பட்ட உதவிகள் அனைத்தையும் மத்திய அரசு செய்ய முன்வர வேண்டும். மாநில அரசுகளின் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும். நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது போர்க்காலப் பணிகளைவிடவும் கடுமையானது ஆகும்.

ஆகவே, மத்திய அரசின் செயல்பாடுகள் 100 சதவீதம் இருக்க வேண்டும். மாநிலங்களிலிருந்து தகவல் பெறும் அதிகாரம் முதற்கொண்டு அனைத்து அதிகாரமும் பெற்றுள்ள மத்திய அரசு இந்த நேரத்தில் கொரோனா சம்பந்தப்பட்ட எதையும் அலட்சிப்படுத்தக் கூடாது. ஆனால் நிலைமை அப்படித்தான் இருக்கிறது என்று ‘அவுட் லுக்’ போன்ற ஏடு அட்டைப் படத்தில் மத்திய அரசின் அலட்சிய செயல்பாட்டைத் தோலுரித்துக் காட்டிவிட்டது.

“மாநில அரசுகளின் கோரிக்கைகளை மோடி அரசு நிறைவேற்றினால்தான் கொரோனாவிலிருந்து மீண்டெழ முடியும்” : முரசொலி

பி.பி.சி. தொலைக்காட்சி செய்தியில் இந்தியாவின் அலட்சியத்தைப் படம் பிடித்து செய்திகளாக வாசிக்கிறார்கள். அவை கொரோனாவைப்பற்றிய செய்திகளாகத்தான் இருக்கின்றன. இதைப் பார்க்கிற போது நமக்கு அச்சமும், பீதியும் உண்டாகின்றன. இவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு மாநில அரசுகளின் வழியாக உள்ளது. இலவசமாக தடுப்பூசி போட வேண்டும். குறிப்பிட்ட காலம் வரை ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்க வேண்டும் என்று மாநிலங்கள் கோருவதில் நியாயம் இல்லாமல் இல்லை.

எடுத்துக்காட்டாக சொல்வதானால் கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவ நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றிற்கு அதிக விலையை நிர்ணயிக்கக்கூடாது என்று சீனாவுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. (சீனா அதற்குப் பதிலும் அளித்து இருக்கிறது). இந்தக் கோரிக்கையைப் போன்றதுதான் மாநிலங்கள் மத்திய அரசிடம் எழுப்பும் கோரிக்கைகள். இப்படிப் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உடனடியாகக் கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொண்டு பணியாற்றினால்தான் கொரோனாவிலிருந்து மீண்டெழுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகும் என திடமாக நம்பலாம்!

banner

Related Stories

Related Stories