இந்தியா

"மோடி PM தான்... ஆனால் பிரதமர் அல்ல” - மேற்கு வங்கத்தில் ராகுல் காந்தி விளாசல்!

வெறுப்பு, வன்முறையை தூண்டும் கட்சியாக பா.ஜக செயல்படுகிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

"மோடி PM தான்... ஆனால் பிரதமர் அல்ல” - மேற்கு வங்கத்தில் ராகுல் காந்தி விளாசல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. 4 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஐந்தாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தி, வெறுப்பு, வன்முறையை தூண்டும் கட்சியாக பா.ஜ.க செயல்படுகிறது எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தல் பரப்புரையின்போது பேசிய ராகுல் காந்தி, “வங்காளத்தின் கலாச்சாரம், பாரம்பரியத்தை அழித்து மக்களை பிளவுபடுத்த பா.ஜ.க விரும்புகிறது. அசாமில், அவர்கள் அதையே செய்கிறார்கள்; தமிழ்நாட்டில் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.கவுடன் இணைந்து இதைச் செய்ய முயற்சிக்கின்றனர். வெறுப்பு, வன்முறை மற்றும் பிளவுபடுத்தும் அரசியலைத் தவிர அவர்களுக்கு எதுவும் முடியாது.

"கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில், காங்கிரஸ் தலைவர்களும் நானும் கூட்டாக பிரதமரைச் சந்தித்து கொரோனாவால் கடுமையான பாதிப்பைச் சந்திக்கப்போகிறோம் என்று எச்சரித்தோம். பொருளாதாரம், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் சிறு அளவிலான தொழில்களைக் காப்பாற்ற நீங்கள் தயாராக வேண்டும் எனக் கூறினோம்.

பிரதமர் மோடியும், பா.ஜ.க-வினரும் எங்களை கேலி செய்தனர். விளைவு, பெரும் பேரழிவு ஏற்பட்டது. ஆனால், பிரதமர் மோடி தட்டு, பாத்திரங்களைத் தட்டுங்கள் கொரோனா ஓடிவிடும் எனக் கூறினார். அதன் பிறகு, மக்கள் மொபைல் போன்களை எடுத்து டார்ச் லைட் அடிக்கச் சொன்னார்.

மோடி பி.எம். தான். ஆனால் அதில் பிரதம அமைச்சர் குறைவாகவே இருக்கிறார். பப்ளிசிட்டி அமைச்சராகத்தான் அதிகமாகச் செயல்படுகிறார் மோடி.” எனச் சாடியுள்ளார்.

banner

Related Stories

Related Stories