இந்தியா

“தடுப்பூசியை கிடைக்கவிடாமல் பற்றாக்குறையை ஏற்படுத்தும் மோடி அரசு” - சோனியா காந்தி கடும் குற்றச்சாட்டு!

நாட்டில் கொரோனா தொற்று சூழலையும் மத்திய பா.ஜ.க. அரசால் கவனமாகக் கையாள முடியவில்லை என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சாடியுள்ளார்.

“தடுப்பூசியை கிடைக்கவிடாமல் பற்றாக்குறையை ஏற்படுத்தும் மோடி அரசு” - சோனியா காந்தி கடும் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தடுப்பூசியைக் கண்டுபிடித்து அதை மக்களுக்குப் போதுமான அளவு கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்பட வைத்துள்ளார்கள்’’ என்று மோடி அரசு மீது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இதையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் பரவல், தொற்றைத் தடுக்க மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள், காங்கிரஸ் கட்சி செய்ய வேண்டிய பணிகள் ஆகியவை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் சனியன்று ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி பேசியது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கூறியதாவது:-

நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தை மத்திய அரசிடம் எழுப்பி, மக்கள் நலனுக்காகச் செயல்படுங்கள் என்று அழுத்தம் கொடுப்பது முதன்மையான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் பொறுப்பு என சோனியா தெரிவித்தார்.

முதலில் நாம் நம் நாட்டு மக்களுக்குத் தேவையான கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், வேகப்படுத்தவேண்டும். அதன் பின்புதான் ஏற்றுமதி குறித்தும், மற்ற நாடுகளுக்குத் தடுப்பூசியைப் பரிசளிப்பது குறித்தும் பேச வேண்டும் என சோனியா காந்தி வலியுறுத்தினார். மாநிலங்களுடன் இணைந்து, கூட்டாட்சித் தத்துவத்துக்கு மதிப்பளித்து மத்திய அரசு செயல்பட வேண்டும்.

மாநிலங்கள் நலனிலும் அக்கறையுடன் செயல்பட்டு, கொரோனாவுக்கு எதிரான போரை மத்திய அரசு முன்னெடுக்க வேண்டும். நாம் அனைவரும் சேர்ந்து தான் கொரோனாவுக்கு எதிராகப் போராட முடியும். காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும், பரிசோதனைகளின் அளவை அதிகப்படுத்த வேண்டும். போதுமான அளவு மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என சோனியா காந்தி அறிவுறுத்தினார்.

மத்திய அரசு கொரோனா வைரஸ் பரவலையும் சரியாகக் கையாளாமல் கட்டுப்படுத்தவில்லை, தற்போது தடுப்பூசியையும் பற்றாக்குறை இல்லாமல் கொண்டு செல்ல முடியவில்லை என சோனியா காந்தி குற்றம் சாட்டினார்.

banner

Related Stories

Related Stories