வைரல்

“நடன வீடியோவிற்கு மதத்தை புகுத்தி அவதூறு பரப்பிய இந்துத்வா கும்பல்” : பதிலடி கொடுத்த கேரள மக்கள்!

கேரளாவில் கடந்த வாரம் இந்து மாணவியும், இஸ்லாமிய மாணவரும் ஆடிய நடனத்தை இந்துத்வா கும்பல்கள், ‘லவ் ஜிகாத்’ என விமர்சித்து வருகின்றனர்.

“நடன வீடியோவிற்கு மதத்தை புகுத்தி அவதூறு பரப்பிய இந்துத்வா கும்பல்” : பதிலடி கொடுத்த கேரள மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்தியில் பா.ஜ.க ஆட்சி பொறுப்பேற்றது முதல் தலித் மக்கள், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, பா.ஜ.க ஆட்சியில் நாடுமுழுவதுமே இந்துத்வா கும்பல்களின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

ஆனால், அதேவேளையில் இந்துத்வா கும்பலின் பிற்போக்கு கருத்துக்கு பல்வேறு ஜனநாயக அமைப்பினர், மாணவர்கள், இளைஞர்கள் என பொதுமக்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து தங்களின் கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

குறிப்பாக, பசுகாவலர்கள், இந்து மத காவலர்கள் என பெயரில் கிளம்பிருக்கும் இத்தகைய கும்பல்கள், மாட்டுக்கறியை உணவாக எடுத்துக்கொள்வர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், இந்து மத பெண்கள் பிற மதத்தினரை காதலித்தாலோ, திருமணம் செய்தாலோ அவர்களை ‘லவ் ஜிகாத்' என முத்திரை குத்துவது போன்ற மோசமான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

“நடன வீடியோவிற்கு மதத்தை புகுத்தி அவதூறு பரப்பிய இந்துத்வா கும்பல்” : பதிலடி கொடுத்த கேரள மக்கள்!

அந்தவகையில் கடந்த 2017ம் ஆண்டு மகளிர் தினத்தில் ஆண்களும் பெண்களும் ஒன்றாக கூடி, மகளிர் தினம் கொண்டாடியதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்வா கும்பல்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இது நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ‘கிஸ் ஆஃப் லவ்’ என்ற பெயரில் முத்தப்போராட்டம் ஒன்றை நடத்தி இந்துத்வா கும்பல்களுக்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தை முதன்முதலில் முன்னெடுத்தது கேரளாதான். கேரளாவின் திருவனந்தபுரம், கோழிக்கோடு எனப் பல இடங்களில் தொடங்கிய இந்த போராட்டம், கேரள சட்டசபையிலும் எதிரோலித்தது. அதேபோல், மாட்டுக்கறிக்கு எதிராக இந்துத்வா கும்பல் தாக்குதல் நடத்தியபோதும், மாட்டுக்கறி உணவு திருவிழாவை நடத்தியது கேளர அரசு.

இந்துத்வா கும்பலுக்கு சலிக்காமல் கேரள மக்கள் பதிலடி கொடுத்துவரும் வேளையில், தற்போது மீண்டும் இந்துவா கும்பலில் உண்மை முகத்தை, அம்பலப்படுத்தி வருகின்றனர். கேரளாவில் கடந்த வாரம் இந்து மாணவியும், இஸ்லாமிய மாணவரும் ஆடிய நடனத்தை இந்துத்வா கும்பல்கள், ‘லவ் ஜிகாத்’ என விமர்சித்து வந்த நிலையில், தற்போது மாணவியும், மாணவரும் ஆடியதைப்போன்ற நடன வீடியோக்களுக்கு இந்திய மாணவர் சங்கத்தினர் வரவேற்று அழைப்பு விடுத்துள்ளனர்.

கேரள மாநிலம் திருச்சூர் மருத்துவ கல்லூரியில் மாணவி ஜானகி ஓம் பிரகாஷ் மற்றும் மாணவர் நவீன் கே.ரசாக் இருவரும் கடந்த வாரம் ரஸ்புடின் (Rasputin) என்ற ஜெர்மன் பாப் பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியைத் தொடர்ந்து, சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வரவேற்று அந்த வீடியோவை பகிர்ந்து வந்தனர்.

ஆனால், மற்றொரு பக்கம் அந்த வீடியோவில் ஆடிய மாணவியின் மதத்தை வைத்தும், மாணவரின் மதத்தை வைத்தும் ‘லவ் ஜிகாத்’ என்று அவதூறு கிளப்பி வருகின்றர் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்வா கும்பல்கள். மேலும் இருவரையும் வைத்து சர்ச்சைக்குறிய கருத்துகளையும் அவ்வமைப்பினர் சமூக வலைதளங்களில் கூறி வந்துள்ளனர். இதனையடுத்து அந்த வீடியோ கேரளாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நவீன் மற்றும் ஜானகிக்கு ஆதரவளித்தும், நடனத்தை மதத்துடன் தொடர்புப்படுத்தி பேசியவர்களுக்குத் கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், இந்திய மாணவர் சங்கத்தினர் ‘STEP UP WITH RASPUTIN, AGAINST RACISM’ என்ற பெயரில் நடனப் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். மாணவ - மாணவியர் ‘ரஸ்புடின்’ நடனம் ஆடி வீடியோ, போன்று நடனம் ஆடி, தங்களின் வாட்ஸ்அப் எண் அல்லது இ-மெயில் ஐ.டிக்கு அனுப்பகோரியும், சிறந்த நடனத்துக்கு ரூபாய் 1,500 பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து திருச்சூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் #resisthate என்ற ஹேஷ்டேக்குடன் ‘ரஸ்புடின்’ நடனம் ஆடி, அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மாணவர்களின் இந்த வீடியோ அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து மாணவி ஜானகி கூறுகையில், “திருவனந்தபுரம்தான் எனது சொந்த ஊர். அம்மா மாயா மருத்துவர்; அப்பா ஓம் பிரகாஷ் மருத்துவ ஆராய்ச்சியாளர். எங்களது வீட்டின் அனுமதியோடுதான் அவ்வபோது மன அழுத்தங்கள் நிறைந்த மருத்துவப்படிப்புக்கு இடையில், ரிலாக்ஸ்டுக்காக இதுபோன்ற நடனம் ஆடி வருகின்றோம்.

ஆனால், இந்தமுறை நாங்கள் ஆடிய வீடியோ இவ்வளவு வேகமாக பரவும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்கள் இருவருக்கும் பிடித்தமான பாடல் அது. தொடர்ந்து நாங்கள் இதுபோன்று வீடியோவிற்கு நடனம் ஆடுவோம்” எனத் தெரிவித்தார்.

“நடன வீடியோவிற்கு மதத்தை புகுத்தி அவதூறு பரப்பிய இந்துத்வா கும்பல்” : பதிலடி கொடுத்த கேரள மக்கள்!

இதனையடுத்து நவீன் கூறுகையில், “வயநாடு மாவட்டம் மானந்தவாடிதான் எனது ஊர். நானும் ஜானகியும் எங்கள் கல்லூரியில் உள்ள ‘வைக்கிங்ஸ்’ என்ற நடனக்குழுவில் இருக்கிறோம். வகுப்பு முடிந்துவிட்டு யூனிஃபார்மில் இருந்தபோது நோயாளிகள் இல்லாத பகுதியில், அந்த நடனம் ஆடினோம்.

இருவருக்கும் நடனத்தில் ஈடுபடு உள்ளதால், படிப்பு நேரம் போக மீது நேரம் நடனம் பயிற்சி மேற்கொள்வோம். படிப்பையும் சிறப்பாக மேற்கொள்வோம்” எனத் தெரிவித்தார். வழக்கம் போல கேரள மக்களின் எதிர்ப்புகளை இந்துத்வா கும்பல்கள் சம்பாரித்துக்கொண்டதாக பலரும் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories