இந்தியா

“குண்டர்களைக் கொண்டு மேற்குவங்கத்தைக் குஜராத்தாக மாற்ற பா.ஜ.க முயற்சி” : மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!

உ.பி., பீகாரிலிருந்து குண்டர்களை கொண்டு வந்து மேற்கு வங்கத்தை குஜராத் போன்ற மாநிலமாக மாற்ற பா.ஜ.க முயற்சி செய்கிறது என மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

“குண்டர்களைக் கொண்டு மேற்குவங்கத்தைக் குஜராத்தாக மாற்ற பா.ஜ.க முயற்சி” : மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. இதில் இரண்டு கட்டங்களுக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து மூன்றாவது கட்டத்தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது.

இந்த சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களைப் பெற்று மூன்றாவது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. எப்படியாக மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற நினைப்பில் பா.ஜ.க தேர்தல் ஆணையத்தின் உதவியோடு பல்வேறு குளறுபடிகளைச் செய்து வருகிறது.

நடந்து முடிந்து இரண்டு கட்ட தேர்தலும் தேர்தல் அதிகாரிகளின் துணையோடு பா.ஜ.கவினர் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி, மக்களை வாக்கு அளிக்கவிடாமல் வன்முறையில் ஈடுபட்டனர். நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் மம்தா பானர்ஜி, வாக்களிக்க வந்த போது பா.ஜ.கவினர் மோதல் போக்கை ஏற்படுத்தி கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்தனர்.

இந்நிலையில், மூன்றாம் கட்ட தேர்தலுக்காகப் பிரச்சாரம் செய்ய வந்த பிரதமர் நரேந்திர மோடி, மேற்குவங்கத்தில் பா.ஜ.க நிச்சயம் ஆட்சி அமைக்கும். முதல்வராகப் பதவி ஏற்பவர் முதல் நாளிலேயே பி.எம் கிசான் திட்டத்தில் கையொப்பமிடுவார். இரண்டு கட்டத்தேர்தலிலும் திரிணமூல் காங்கிரஸ் படுதோல்வியடையும் என பேசினார்.

“குண்டர்களைக் கொண்டு மேற்குவங்கத்தைக் குஜராத்தாக மாற்ற பா.ஜ.க முயற்சி” : மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!

இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய மம்தா பானர்ஜி, மோடி என்ன கடவுளா அல்லது வருவதை முன்கூட்டியே கூறும் அபார சக்தி பெற்ற மனிதரா? இன்னும் 6 கட்டத் தேர்தல் இருப்பதால், வெற்றியைப் பற்றிப் பேச முடியாது என சாடியுள்ளார்.

ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள கானாகுல் நகரில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போது, “பிரதமர் மோடி அவரைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்? கடவுள் என நினைக்கிறாரா ? அல்லது வருவதை முன்கூட்டியே கூறும் சக்தி படைத்தவர் என்று நினைக்கிறாரா? இன்னும் 6 கட்டத் தேர்தல் இருக்கும் நிலையில் வெற்றியைப் பற்றி யாரும் இப்போதே உரிமை கொள்ள முடியாது.

மாநிலத்தில் சிறுபான்மையினர் வாக்குகளைப் பிரிக்கவும், தடுக்கவும் புதிதாக இந்திய மதச்சார்பற்ற முன்னணி கட்சி ஒன்று உருவாகியுள்ளார். பா.ஜ.கவிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு அப்பாஸ் சித்திக் இந்த புதிய கட்சி துவங்கியுள்ளார். மேலும் மோடி மற்றும் அமித்ஷாவின் உத்தரவின் படிதான் தேர்தல் ஆணையமும், போலிஸாரும் செயல்படுகின்றனர். மேலும் மாநிலத்தில் ஏராளமான போலிஸார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேற்குவங்கத்தில் வகுப்பு மோதலை உருவாக்க பா.ஜ.கவினர் முயற்சிக்கின்றனர். உத்தரபிரதேசம், பீகாரில் இருந்து குண்டர்களைக் கொண்டுவந்து மேற்குவங்கத்தைக் கைப்பற்ற முயல்கின்றனர். குஜராத்தைப் போல மேற்குவங்கம் மாறுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories