இந்தியா

“எந்த பொத்தானை அழுத்தினாலும் பாஜகவுக்கு வாக்குகள் பதிவாகிறது”: மே.வங்கத்தில் மோடி அரசு நடத்திய குளறுபடி !

மேற்கு வங்கத் தேர்தலில் ஒருசில இடங்களில் எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் பா.ஜ.கவுக்கு வாக்கு பதிவாகுவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

“எந்த பொத்தானை அழுத்தினாலும் பாஜகவுக்கு வாக்குகள் பதிவாகிறது”: மே.வங்கத்தில் மோடி அரசு நடத்திய குளறுபடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளிலும், அசாமில் 47 தொகுதிகளிலும் சட்டப்பேரவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில் மேற்கு வங்கத்தில் 79.79% வாக்குகளும், அசாமில் 72.14% வாக்குகளும் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் பல இடங்களில், வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் மோதல் சம்வவங்கள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஒருசில இடங்களில் எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் பா.ஜ.கவுக்கு வாக்கு பதிவாகுவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அளித்துள்ள புகாரில், முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற காசிப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில், வாக்குச்சாவடிகளை பா.ஜ.கவினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

“எந்த பொத்தானை அழுத்தினாலும் பாஜகவுக்கு வாக்குகள் பதிவாகிறது”: மே.வங்கத்தில் மோடி அரசு நடத்திய குளறுபடி !

அதுமட்டுமல்லாது மின்னணு இயந்திரந்தில் எந்தக்கட்சிக்கு வாக்களித்தாலும் பா.ஜ.கவுக்கு சாக்குகள் பதிவானதாகவும், விவிபேட் இயந்திரத்தில் இது காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் ஆளும் கட்சிக்குச் செல்வாக்கு உள்ள பகுதிகளில், மக்களை வாக்களிக்காவிடாமல் பா.ஜ.கவினர் தடுத்துள்ளனர்.

எனவே தேர்தல் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்குப்பதிவு சதவீதம் குறித்த விவரங்களில் வெளிப்படைத்தன்மை இல்லையென்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories