இந்தியா

“ஓடும் ரயிலில் இருந்து கன்னியாஸ்திரிகளை இறக்கிவிட்ட இந்துத்வா கும்பல்” : பா.ஜ.க ஆளும் உ.பியில் அராஜகம்!

பா.ஜ.க ஆளும் உத்தர பிரேதச மாநிலத்தில் கன்னியாஸ்திரிகள் இரண்டு பேர் ஏ.பி.வி.பி அமைப்பினரால் ஓடும் ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“ஓடும் ரயிலில் இருந்து கன்னியாஸ்திரிகளை இறக்கிவிட்ட இந்துத்வா கும்பல்” : பா.ஜ.க ஆளும் உ.பியில் அராஜகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க ஆளும் உத்தர பிரேதச மாநிலத்தில் தலித், சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடில்லை.

சமீபகாலமாக பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் மற்றும் கொலைகள் அதிகரித்துள்ள சூழலில், கன்னியாஸ்திரிகள் இரண்டு பேர் ஏ.பி.வி.பி அமைப்பினரால் ஓடும் ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி பகுதி அருகே கடந்த வெள்ளியன்று இரண்டு கன்னியாஸ்திரிகள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் இருவர் ரயிலில் பயணம் செய்துள்ளனர். அப்போது அதே ரயிலில் பா.ஜ.கவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி அமைப்பினரும் பயணித்துள்ளனர்.

அப்போது கன்னியாஸ்திரிகள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் இருவரையும் ரயிலில் மதமாற்றம் செய்கிறீர்களா எனக் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் ஒருகட்டத்தில் ஓடும் ரயிலில் இருந்து இருவரையும் இறக்கிவிட்டுள்ளனர்.

இதனையடுத்து கன்னியாஸ்திரிகளிடம் ரயில்வே போலிஸார் விசாரித்தபோது மதமாற்ற பணிகளில் அவர்கள் ஈடுபடவில்லை என்பது உறுதியானது. ஆனாலும் ஏ.பி.வி.பி அமைப்பினர் அவர்களை பயணம் செய்ய அனுமதிக்காததால் அவர்கள் திரும்பிச் சென்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதைத் தொடர்ந்து பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தைக் கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டித்து, உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறி மத்திய உள்துறைக்கு கடிதம் எழுதினார்.

“ஓடும் ரயிலில் இருந்து கன்னியாஸ்திரிகளை இறக்கிவிட்ட இந்துத்வா கும்பல்” : பா.ஜ.க ஆளும் உ.பியில் அராஜகம்!

அந்தக் கடித்ததில், “இது மாதிரியான சம்பவங்கள் தேசத்தின் உண்மையான முகத்தையும், பாரம்பரியத்தையும், சமத்துவத்தையும் சீர்குலைக்கின்றன. தனிமனித சுதந்திரமே இது மாதிரியான சம்பவங்களால் பறிக்கப்படுகின்றன. அதனால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகள் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories