அரசியல்

₹.236 கோடி டெண்டருக்கு ₹.1262 கோடி: அதிமுகவின்  இமாலய ஊழல் அம்பலம் -ஆதாரத்துடன் பட்டியலிட்ட ஆர்.எஸ்.பாரதி

ஒரு தொழிலாளிக்கு நாள் ஒன்றுக்கு 12 ஆயிரத்து 58 ரூபாய் கூலி வழங்கியதாக அதிமுக அரசு கணக்கு காட்டியுள்ளதாக ஆர்.எஸ்.பாரதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

₹.236 கோடி டெண்டருக்கு ₹.1262 கோடி: அதிமுகவின்  இமாலய ஊழல் அம்பலம் -ஆதாரத்துடன் பட்டியலிட்ட ஆர்.எஸ்.பாரதி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு மின்வாரியத்திற்காக விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நிலக்கரியை இறக்க தொழிலாளர்களுக்கு கூலி வழங்கியதில் 1026கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், கணக்குத் தணிக்கைக் குழுவின் ஆட்சேபனையையும் மீறி எந்தவித ஆவணமும் இன்றி டெண்டர் தொகை வழங்கப்பட்டுள்ளது என்றும் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி. நாடாளுமன்றஉறுப்பினர் மூத்த வழக்கறிஞர் என். ஆர்.இளங்கோ ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி. நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இது குறித்துக் குறிப்பிட்டதாவது :-

ஏற்கெனவே ஆளும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் மீது இரண்டு முறை ஆளுநரிடத்தில் புகார்களைக் கொடுத்திருக்கின்றோம். அந்தப் புகார்களின் மீது இதுவரை என்ன நடவடிக்கை ஆளுநர் எடுத்தார் என்பது தெரியவில்லை. ஆனால், தேர்தல் நாள் நெருங்க நெருங்க இந்த ஆட்சியாளர்கள் புரிந்திருக்கின்ற பல்வேறு ஊழல்கள், எங்களுக்கு பல தகவல்கள் மூலமாக அறிவாலயத்திற்கு வந்து குவிகின்றன.

பயங்கரமான ஊழல்!

அவற்றில் ஒன்றான மிகப் பயங்கரமான உலகத்தில் வேறு எங்கும் இப்படிப்பட்ட ஊழல் நடந்திருக்குமா? என்று ஆச்சரியப்படக் கூடிய அளவிற்கு, ஒரு நிகழ்வு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நடைபெற்று இருக்கிறது. அது குறித்து, சி.ஏ.ஜி. என்று சொல்லப்படுகின்ற Indian audit and accounts department office of the accountant general economics and revenue sector audit, Tamilnadu, TNEBNPKRR Maaligai, AnnaSalai, Chennai-2 என்ற அந்த முகவரியில் இருந்து irregular constitution of audit committee என்ற தலைப்பின் கீழ் இந்த ஆட்சியாளர்களால் 2011 ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரை மின்சார வாரியத்தில் ஒரு பயங்கரமான ஊழல் நடைபெற்று இருக்கிறது. அதனை எங்களுக்குத் தெரியப்படுத்தி இருக்கிறார்கள். அதனை முதலில் ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு, பிறகு உங்களுக்குத் தமிழில் சொல்லுகிறேன்

The contention of coal wing that the WUC (wagon unloading charges) are volume based work was also dismissed by the internal audit by observing that if WUC was volume based then the port should have collected the same on 'per MT' basis but VPT was collecting labour charges with levy for the number of labour supplied for unloading work. It may be noted that the contractor paid 236.57 crore to VPT where as TANGEDCO reimbursed 1,267.49 resulting in reimbursement of 1,026.64 crore to the contractor without documentary evidence during 2011-16. Interestingly, the coal wing justified the reimbursement of exorbitant salary of 12,058 per day per private coolie (unskilled worker) deployed by the contractor for manual unloading of coal from railway wagons at VPT. Finally, the Board Internal Audit Branch had to drop its audit objections citing that it had to obey the instructions of CMD/TANGEDCO.

வேகன் க்ளியரிங் கோடிங்க்கு காண்ட்ராக்ட்டே 236 கோடியே 57 லட்சம் ரூபாய். ஆனால், இவர்களே என்ன சொல்கிறார்கள் என்றால், அந்தக் காண்ட்ராக்டருக்கு, ஆயிரத்து 26 கோடியே 49 லட்சம் ரூபாய். ஏறத்தாழ ஆயிரத்து 26 கோடி ரூபாய் அதிகமாகக் கொடுக்கிறார்கள். அந்தக் காண்ட்ராக்டர் கேட்காமலேயே, இவர்கள் கொடுக்கிறார்கள்.

ரூ.1026 கோடி ஊழல்!

எப்படி கொடுக்கிறார்கள் என்றால், இந்தப் பணம் கொடுத்ததற்கு என்ன டாக்குமெண்ட், ஆதாரம் என்று கேட்கிறார்கள்; அதற்கு எந்த விதமான விளக்கமும் இல்லை. இந்தப் பணம் எங்கே போயிற்று? காண்ட்ராக்டருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை விட அதிகமாகக் கொடுத்திருக்கிறீர்களே, அந்தப் பணத்தை எப்படி கொடுத்தீர்கள்? என்று ஆடிட்டில் கேட்கிறார்கள். அப்பொழுதிருந்த மின்சார வாரியத்தினுடைய சி.எம்.டி., அதை நீங்கள் கேட்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறார். அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நாங்கள் அப்பொழுது விட்டுவிட்டோம். ஆனால், இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தோம். ஒரு நாளைக்கு ஒரு தினக்கூலி வாங்கும் நபருக்கு 12 ஆயிரத்து 58 ரூபாய் கூலி கொடுத்திருக்கிறோம் என்று கணக்குக் காட்டியிருக்கிறார்கள். அப்படி கணக்குக் காட்டி, ஆயிரத்து 26 கோடி ரூபாயை வாங்கியிருக்கிறார்கள். ஒரு சாதாரண கூலி ஆளுக்கு, 12 ஆயிரத்து 58 ரூபாய் கொடுத்திருக்கிறோம் என்று கணக்குக் காட்டி, ஆயிரத்து 26 கோடி ரூபாய் கூடுதலாகப் பணம் பெற்றிருக்கிறார்கள் என்று ஆடிட் அப்ஜெக்ஷன் செய்திருக்கிறது

₹.236 கோடி டெண்டருக்கு ₹.1262 கோடி: அதிமுகவின்  இமாலய ஊழல் அம்பலம் -ஆதாரத்துடன் பட்டியலிட்ட ஆர்.எஸ்.பாரதி

சி.ஏ.ஜி. மறு விசாரணை நடவடிக்கை இல்லை!

அப்படி ஆடிட் அப்ஜெக்ஷன் சி.ஏ.ஜி. செய்த நேரத்தில், அதனை நீங்கள் டிராப்ட் செய்யுங்கள் என்று சி.எம்.டி. கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அதை மறு விசாரணை செய்ய வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்கள். 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் இல்லை. ஆக, சி.ஏ.ஜி. என்பது, தமிழ்நாடு அரசின் கைகளில் இல்லை. மத்திய அரசாங்கத்தின் கையில்தான் உள்ளது.

பி.ஜே.பி.யை ஆதரிக்க காரணம்!

மத்திய அரசாங்கம் 2020 பிப்ரவரி மாதத்திலிருந்து 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இதைப்பற்றி கவனிக்கவில்லை என்றால், ஏன் இவர்களுக்கு கூட்டு ஏற்பட்டு இருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் புரிகிறது அல்லவா! அதேபோல, கடந்த தேர்தலில் கண்டெய்னரில் இருந்த 571 கோடி ரூபாய் பணத்தை பிடித்தார்கள். அதை சி.பி.ஐதான் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு போட்டிருந்தது. ஆனால், ஐந்து ஆண்டுகளாகியும் ஒருவரையும் விசாரிக்கவில்லை. சி.பி.ஐ.யும் மத்திய அரசாங்கத்தின் கைகளில் தான் உள்ளது. ஆக, ஆர்.கே.நகர் தொகுதியில் 89 கோடி ரூபாய், கண்டெய்னர் லாரியில் பிடித்த 571 கோடி ரூபாய் பிடித்தார்கள்; 2021 சட்டப்பேரவை தேர்தலும் வந்துவிட்டது - இதுவரையில் அந்தப் பணம் யாருடையது என்று இதுவரையில் தெரியவில்லை. ஆக, பி.ஜே.பி.யை ஏன் இவர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மத்திய-மாநில அரசுகளின் மிகப்பெரிய ஊழல்!

இரண்டு சர்க்காரும் சேர்ந்து, இப்படிப்பட்ட ஒரு மிகப்பெரிய ஊழலை, மின்சார வாரியத்தில், குறிப்பிட்ட ஐந்தாண்டுக்குள் செய்திருக்கிறார்கள் என்ற தகவல் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அதை உங்கள் மூலமாக மக்களுக்குத் தெரியப்படுத்த நாங்கள் விரும்புகின்றோம்.

செய்தியாளர்: சி.ஏ.ஜி. ரிப்போர்ட் எப்பொழுது சப்மிட் செய்தார்கள்?

பதில்: பிப்ரவரி மாதம்9 ஆம் தேதி, 2020 ஆம் ஆண்டு.

செய்தியாளர்: சட்டமன்றத்தில் சப்மிட் செய்யப்பட்டதா?

பதில்: இல்லை. நாங்கள் புகார் கொடுக்கிறோம் என்று சொன்ன பிறகு, இவர்களுடைய ஆட்சி முடியப் போகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. நாள்தோறும் ஏகப்பட்ட ஆதாரங்கள் எங்களுக்கு வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக, கருத்துக் கணிப்புகளில் நாங்கள்தான் ஆட்சிக்கு வரப்போகிறோம் என்று முடிவு வந்த பிறகு, அவர்களுடைய ஊழல் குறித்த தகவல்கள் ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கின்றன.

ஆதாரப்பூர்வமாகத்தான் புகார் மனு!

செய்தியாளர்: இவ்வளவு நாட்களாக அவர்கள் செய்த ஊழல்கள் உங்களுக்குத் தெரியவில்லையா?

பதில்: அவர்கள் செய்த ஊழல் பற்றி ஆதாரப்பூர்வமாக ஏற்கெனவே ஆளுநரிடம் கொடுத்திருக்கிறோம். நாங்கள் எப்பொழுதும் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசுவது கிடையாது. ஆதாரப்பூர்வமாக தகவல் கிடைத்ததைத்தான் நாங்கள் புகார் மனுவாகக் கொடுத்திருக்கிறோம். 95ஆம் ஆண்டிலேயே எங்களுடைய தலைவர் கலைஞர் அவர்கள் ஆதாரத்துடன் புகார் கொடுத்தார். அதற்குப் பிறகுதான் நீதி விசாரணை நடைபெற்று, ஜெயலலிதாஅம்மையாருக்குத் தண்டனை கிடைத்தது பற்றி உங்களுக்கெல்லாம் தெரியும்.

செய்தியாளர்: ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற நடவடிக்கை குறித்த தீர்மானத்திற்கு இந்தியா வெளிநடப்பு செய்ததுபற்றி...?

பதில்: எங்கள் தளபதி கண்டித்திருக்கிறார்; வைகோ கண்டித்திருக்கிறார்; எங்கள் கூட்டணி தலைவர்கள் எல்லாம் கண்டித்திருக்கிறார்கள். அந்தத் தீர்மானத்தை மத்திய அரசாங்கம் ஆதரிப்பதாகத்தான் இருந்ததாகச் சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறுவதையொட்டி, வெளிநடப்பு செய்ததாகச் சொல்கிறார்கள். இலங்கைக்கு எதிரான அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவுதர வேண்டும் என்று அறிக்கை விட்டவர் எங்கள் தலைவர் தளபதிஅவர்கள்தான்.

நிலம் அபகரிப்பு நீதிமன்றமே தீர்ப்பு!

செய்தியாளர்: தி.மு.க.வுக்கு வாக்களித்தால் நில அபகரிப்பு அதிகரிக்கும் என்று பா.ஜ.க. சி.பி.ரவி சொல்லியிருக்கிறாரே?

பதில்: கொடநாட்டில் அபகரித்தவர் யார் என்று நீதிமன்றமே தீர்ப்பு சொல்லியிருக்கிறதே! எங்களுக்கு ஒன்றும் தண்டனை வரவில்லை. அந்தச் சட்டம் கொண்டு வந்ததே தவறு என்று சொல்லிவிட்டார்களே! அதே நேரத்தில், உச்ச நீதிமன்றம் வரை சென்று, நிலத்தை அபகரித்தவர் யார்? அமிர்தான்ஜன் கட்டடத்தை அபகரிக்க வேண்டும் என்று நினைத்தவர் யார்? என்ற செய்தி வெளிவந்ததே! கங்கை அமரனின் வீட்டை அபகரிக்க நினைத்தது யார்? என்று மக்களுக்கே நன்றாகத் தெரியும். இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

செய்தியாளர்: இந்த ஊழல் புகார் குறித்து தி.மு.க.வின் அடுத்த கட்டநிலை என்ன? இதனை மக்களிடம் முன்னெடுத்துச் செல்வீர்களா?

பதில்: இப்பொழுது மக்களிடம் சொல்வோம். அடுத்து ஆட்சிக்கு வந்ததும் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

வாக்குப் பெட்டியில் முறைகேடு!

செய்தியாளர்: சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு வெளிவந்திருக்கின்றன. இருந்தாலும், வாக்கு செலுத்தப்பட்ட நாளிலிருந்து, வாக்குகள் எண்ணப்படும் நாளுக்கும் இடை யில் 28 நாள்கள் இருக்கின்றன. இந்த இடைப்பட்ட நாளில், அ.தி.மு.க. அரசுக்கு, மத்திய அரசு ஆதரவாக இருப்பதினால், வாக்கு பெட்டிகளில் முறைகேடு நடைபெறும் என்கிற எண்ணம் மக்களிடையே பரவலாக இருக்கிறதே, இது குறித்து தங்களுடைய கருத்துஎன்ன?

பதில்: நாங்களும் விழிப்பாக இருக்கிறோம், இருப்போம். நீதிமன்றத்தையும் நாடியிருக்கிறோம்; தேர்தல் ஆணையம் நியாயமாக செயல்படும் என்ற நம்பிக்கை இருப்பதினால்தான் நீதிமன்றம் சென்றோம்; உங்கள் கேள்வி குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அதுகுறித்து நான் கருத்துசொல்ல விரும்பவில்லை.

இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

banner

Related Stories

Related Stories