இந்தியா

"மோடி ஆட்சியில் ஜனநாயக அந்தஸ்தை இழக்கிறது இந்தியா" : சுவீடன் நாட்டின் வி-டெம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!

ஜனநாயக நாடு என்ற அந்தஸ்தை இழந்து எதேச்சதிகாரத்தை நோக்கி இந்தியா செல்வதாக சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஜனநாயகத்தை அளவிடும் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"மோடி ஆட்சியில் ஜனநாயக அந்தஸ்தை இழக்கிறது இந்தியா" : சுவீடன் நாட்டின் வி-டெம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பான freedom house சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், "நரேந்திர மோடி 2014ம் ஆண்டில் பிரதமராகப் பதவிக்கு வந்ததில் இருந்து கல்வியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு மிரட்டல், முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் ஆகியவையால், நாட்டின் அரசியல் உரிமைகள் மற்றும் சட்ட உரிமைகள் மோசமடைந்துள்ளன. மேலும் மோடி இந்தியாவைச் சர்வாதிகாரத்தை நோக்கி அழைத்து செல்கிறார்" என கூறியிருந்தது.

இந்நிலையில், சுவீடன் நாட்டைச் சேர்ந்த வி-டெம் என்ற ஜனநாயகத்தை அளவிடும் நிறுவனம், இந்தியா எதேச்சதிகாரத்தை நோக்கி பயணிப்பதாக, இந்திய அரசு, மதச்சார்பின்மைக்கு எதிராகச் செயல்படுவதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது பற்றி வி-டெம் அறிக்கையில் கூறியிருப்பதாவது, "ஊடகங்கள், கல்வியாளர்கள் மற்றும் சிவில் சமூகத்தின் சுதந்திரம் பெரிய அளவில் குறைந்துள்ளது. இது இந்தியா எதேச்சதிகார செயல்முறையில் பயணிக்கிறது என்பதைக் காட்டுகிறது. மோடிக்கு அரசுக்கு முன்னர் இருந்த அரசாங்கம் தணிக்கை செய்வதை அரிதாகவே பயன்படுத்தியது.

ஆனால், இப்போது இந்திய அரசு பாகிஸ்தானைப் போலவே எதேச்சதிகாரமாகவும், அதன் அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளத்தை விட மோசமானதாகவும் உள்ளது. மேலும், இப்போது உள்ள இந்திய அரசு 2019ம் ஆண்டு திருத்தப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் UAPA சட்டம் அரசியல் எதிரிகளைத் துன்புறுத்துவதற்கும், அச்சுறுத்துவதற்கும், சிறையில் அடைப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

அத்துடன் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் மக்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இந்தியாவை உலகின் 'மிகப்பெரிய ஜனநாயகம்' என்ற அந்தஸ்திலிருந்து 'தேர்தல் எதேச்சதிகாரம்' என்ற அந்தஸ்திற்குத் தரம் குறைத்துள்ளது என தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்த அறிக்கை, தொடர்பான செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, இந்தியா 'இனி ஜனநாயக நாடக இருக்காது' எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories