இந்தியா

நள்ளிரவில் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு.. டெல்லி போராட்டக் களத்தில் பதற்றம்!

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச்சூடு. போலீஸ் விசாரணை.

நள்ளிரவில் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு.. டெல்லி போராட்டக் களத்தில் பதற்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை நீக்கக் கோரியும் டெல்லி குண்டலி எல்லையில் விவசாயிகள் கடந்த 103 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த பகுதியில் நேற்று இரவு 12 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மூன்று முறை விவசாயிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார்.

டி.டி.ஐ. வணிக வளாகம் அருகே நடந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டில் விவசாயிகள் யாரும் காயம் அடையவில்லை. துப்பாக்கிசூடு நடத்திய அந்த மர்ம நபர் வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.

விவசாயிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.

banner

Related Stories

Related Stories