இந்தியா

வரலாறு காணாத சரிவு: ஒரே நாளில் ரூ.5.43 லட்சம் கோடி முதலீடு க்ளோஸ்- மோடி ஆட்சியில் முதலீட்டாளர்களும் கவலை!

பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்ததால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் 5.43 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

வரலாறு காணாத சரிவு: ஒரே நாளில் ரூ.5.43 லட்சம் கோடி முதலீடு க்ளோஸ்- மோடி ஆட்சியில் முதலீட்டாளர்களும் கவலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாகப் பதவியேற்றது தொடங்கி, இந்திய பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக இந்தியப் பங்குச் சந்தைகள் வர்த்தக வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமையன்று பலத்த அடி வாங்கியுள்ளன.

வியாழக்கிழமையன்று 51,039.31 புள்ளிகளில் நிலைபெற்றிருந்த மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ், வர்த்தக வாரத்தின் இறுதி நாளில் ஒரேநாளில் ஆயிரத்து 939.32 புள்ளிகள் சரிவைச் சந்தித்தது. 49,099.99 புள்ளிகளுக்கு தரையைத் தட்டியது.

இதேபோல் தேசியப் பங்குச் சந்தை குறியீடான நிப்டி-யும் 568.20 புள்ளிகள் சரிந்து 14 ஆயிரத்து 529.15 புள்ளிகளுக்கு இறங்கியது. இதனால் முதலீட்டாளர்கள் பெரிதும் கலங்கிப் போயினர். குறிப்பாக பெருமுதலீட்டாளர்களைக் காட்டிலும், சில்லரை முதலீட்டாளர்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்தனர்.

வரலாறு காணாத சரிவு: ஒரே நாளில் ரூ.5.43 லட்சம் கோடி முதலீடு க்ளோஸ்- மோடி ஆட்சியில் முதலீட்டாளர்களும் கவலை!

இந்நிலையில், இந்தியப் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் ஒட்டுமொத்தமாக வெள்ளியன்று ஒரேநாளில் மட்டும் 5 லட்சத்து 43 கோடி அளவிற்கு இழப்பைச் சந்தித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. ஒரு நிமிடத்திற்கு 1,450 கோடி ரூபாய் முதலீட்டு மதிப்பு என்ற வகையில் அவர்கள் இழப்பைச் சந்தித்திருப்பது தெரியவந்துள்ளது.

இதனிடையே, அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பும் கடுமையாக சரிந்துள்ளது. வியாழக்கிழமையன்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 72 ரூபாய் 42 காசுகளாக இருந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று ஒரே நாளில் 105 காசுகள் சரிந்து, 73 ரூபாய் 47 காசுகள் என வீழ்ச்சி அடைந்துள்ளது.

banner

Related Stories

Related Stories