இந்தியா

மோடி ஸ்டேடியம்.. அம்பானி, அதானி END.. அன்றே கணித்த ‘தமிழ்படம் சிவா’ - அடுத்து காவி பந்து தான? 

மோதிராவில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு நரேந்திர மோடி மைதானம் என பெயர் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர்.

மோடி ஸ்டேடியம்.. அம்பானி, அதானி END.. அன்றே கணித்த  ‘தமிழ்படம் சிவா’ - அடுத்து காவி பந்து தான? 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அகமதாபாத் மோதிராவில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தை 1983ம் ஆண்டில் இருந்து சர்வதேச போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து இந்த மைதானத்தை விரிவுபடுத்தலாம் என பிசிசிஐ முடிவு செய்திருந்தது. அப்போது மைதானத்தை முழுமையாக இடித்து விட்டு உலகிலேயே மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமாக இதை மாற்றலாம் என நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

இதையடுத்து இதற்கான பணிகள் முழுமையாக முடிந்து நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மைதானத்தைத் திறந்து வைத்தார். அப்போது அவரை எல்லோரும் சர்தார் வல்லபாய் படேல் மைதானம் என்று தான் நினைத்திருந்தனர். ஆனால், மைதானத்திற்கு நரேந்திர மோடி என பெயர் மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டு பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

மோடி ஸ்டேடியம்.. அம்பானி, அதானி END.. அன்றே கணித்த  ‘தமிழ்படம் சிவா’ - அடுத்து காவி பந்து தான? 
Admin

அதுமட்டுமல்லாமல், இந்த மைதானத்தில் ஒரு முனை Reliance End மற்றொரு முனை Adani End என்று பெயரிடப்பட்டுள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கார்பரேட்டுகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது என கூறி வரும் நிலையில், இதை உறுதிசெய்யும் விதமாக இந்த செயல் அமைந்துள்ளது.

இந்நிலையில், நெட்டிசன்கள் பலரும் பெவிலியன் எண்ட்களின் பெயர்களைப் பகிர்ந்து தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர். அதில், ஒரு பதிவில்,`நரேந்திர மோடி மைதானம்... அதானி எண்ட், ரிலையன்ஸ் எண்ட் (அம்பானி)... அப்புறம் ஏன் பிங்க் பால்ல விளையாடுறாங்க... ஆரஞ்சு (காவி) பால்ல விளையாடலாமே?'' என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

மோடி ஸ்டேடியம்.. அம்பானி, அதானி END.. அன்றே கணித்த  ‘தமிழ்படம் சிவா’ - அடுத்து காவி பந்து தான? 

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நெட்டிசன் ஒருவர், மைதானம் மற்றும் பெவிலியன் எண்ட்களின் பெயர்களைப் பார்த்தால் சிவா நடித்த, தமிழ்ப் படம் நினைவிற்கு வருகிறது. இதில், `சிவா பீச்', `சிவா எலெக்ட்ரிசிட்டி போர்டு' `சிவா ஏட்போர்ட்' என எல்லா இடத்திலும் சிவா... சிவா போன்ற காட்சிகள் வரும். அப்படி இருக்கிறது கிரிக்கெட்மைதானத்திற்கு நரேந்திர மோடி பெயர்வைத்தது என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்ததையடுத்து, ,"கிரிக்கெட் அரங்கத்தின் பெயர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது, ஒட்டுமொத்த விளையாட்டு வளாகத்துக்கும் சர்தார் படேல் என்ற பெயரே தொடர்கிறது என மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜாவடேகர், ரவி சங்கர் பிரசாத் ஆகியோர் விளக்கமளித்துள்ளனர். இவர்களின் இந்த விளக்கங்களைப் பார்க்கும் போது, "மாப்பிள்ளை இவர்தான், ஆனால் இவர் போட்டிருக்கிற சட்டை என்னுது...:" என்ற படையப்பா படத்தில் வரும் வசனம்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். இப்படி நகைச்சுவையாக இருக்கிறது இவர்கள் விளக்கம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories