இந்தியா

ஒருபுறம் பெட்ரோல் டீசல் விலை.. மறுபுறம் ஃபாஸ்டேக்.. வரிந்து கட்டி வசூல் வேட்டை நடத்தும் பாஜக அரசு..!!

நள்ளிரவு 12 மணி முதல் ஃபாஸ்டேக் அமல்படுத்தப்பட்டதால் பல்வேறு வாகன ஓட்டிகள் அவதி. பெட்ரோல் டீசல் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வாகனங்களை இயக்க முடியவில்லை என குற்றச்சாட்டு

ஒருபுறம் பெட்ரோல் டீசல் விலை.. மறுபுறம் ஃபாஸ்டேக்.. வரிந்து கட்டி  வசூல் வேட்டை நடத்தும் பாஜக அரசு..!!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிப்ரவரி 16ஆம் தேதி நள்ளிரவு முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் பயன்படுத்தப்படும் முறை நடைமுறைக்கு வந்தது. அது போல, தமிழகம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் தற்பொழுது அமல்படுத்தப்பட்டுள்ளது இதனால் பல்வேறு வாகன ஓட்டிகள் அவதியுற்று வருகின்றனர்.

சென்னை கோயம்பேட்டில் இருந்து செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி வழியாக திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு தனியார் சொகுசு ஆம்னி பேருந்துகள் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன.

16ஆம் தேதி நள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களிடம் இரட்டிப்பு சுங்கவரி வசூல் செய்வதால் தங்களால் வாகனங்களை இயக்க முடியவில்லை எனவும் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வாகனங்களை முற்றிலுமாக இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என வாகன ஓட்டிகள் வேதனையுடன் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

டீசல் விலை தினந்தோறும் அதிகரித்து வரும் நிலையில் ஃபாஸ்டேக் தற்பொழுது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகளவிலான வாகனங்களில் இரட்டிப்பான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

அனைத்து வகையிலும் சாமானிய மக்களை இந்த மத்திய பாஜக அரசு வஞ்சித்து, மக்களிடம் இருந்து பெரும் வரி பணத்தை மக்கள் நலத் திட்டங்களுக்கு செலவிடாமல் கார்ப்பரேட்டுகளுக்கு வாரி இறைத்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories