இந்தியா

“மோடி-அமித்ஷா இடையேயான போட்டியால் அலைக்கழிக்கப்படும் விவசாயிகள்” - பி.ஆர்.பாண்டியன் கடும் குற்றச்சாட்டு!

பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும் இருக்கிற போட்டியால் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என பி.ஆர்.பாண்டியன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

“மோடி-அமித்ஷா இடையேயான போட்டியால் அலைக்கழிக்கப்படும் விவசாயிகள்” - பி.ஆர்.பாண்டியன் கடும் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழுத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேற்று செய்தியாளர்களளை சந்ததித்தார்.

அப்போது, மத்திய அரசின் வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக டெல்லியை சுற்றியிருக்கிற பஞ்சாப், ஹரியானா, உத்திரப் பிரதேச மாநிலங்களில் போராட்டம் தீவிரம் அடைந்து இருக்கிறது. குடியரசு தின விழாவில் டிராக்டர் பேரணியில் திட்டமிட்டு மத்திய அரசாங்கமே திரைப்பட நடிகரை தூண்டிவிட்டு போராட்டத்தை திசைத்திருப்பி டெல்லி மாநகரத்திற்கு அழைத்துச்சென்று செங்கோட்டையில் கொடியேற்ற வைத்திருக்கின்ற நிகழ்ச்சி அம்பலமாகியிருக்கிறது.

விவசாயிகள் டெல்லி மக்களுக்கும் சுற்றுபுற மக்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் அந்தப் பேரணி துவங்கிய இடத்திலேயே மீண்டும் முடிந்திருக்கிறது . இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க பேரணியாக கருதப்படுகிறது. இதை ஆதரித்து தமிழ்நாட்டிலும் தொடர்ந்து இரண்டு மாத காலமாக போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குடியரசு தின விழாவன்று டெல்லியில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாட்டிலும் டிராக்டர் பேரணிக்கு நாங்கள் அறைகூவல் விடுத்தும் அதை ஏற்று விவசாய அமைப்புகள் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி இருக்கின்றனர்.

திருவாரூர் மாவட்டம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்ற சம்பவங்கள் திட்டமிட்டு தமிழக முதலமைச்சர் காவல்துறையை பயன்படுத்தி விவசாயிகளுக்கும் காவல்துறைக்குமான உறவுகளை சீர்குலைக்கும் நிலையில் காவல்துறையை பயன்படுத்தி மிரட்டுகிற நடவடிக்கையை முதலமைச்சர் கைவிட வேண்டும்.

அரசியல் வேறுபாடுகள் இருக்கலாம். காவல்துறையும் விவசாயிகளும் நல்ல நட்பு முறையில் நல்ல அணுகுமுறை உள்ளபோது முதலமைச்சர் தனது அரசியல் சுயலாபத்திற்காக காவல்துறையை தூண்டிவிட்டு விவசாயிகள் மீது கொலை வழக்குப்பதிவு விடுவதன் மூலமாக விவசாயிகளை கொலைகாரர்களாக சித்தரிக்க முயற்சிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இது முதலமைச்சரின் அரசியல் நலனுக்கு விரோதமானது. விவசாயிகள் மீது போடப்பட்ட கொலை முயற்சி வழக்குகள் எல்லாம் திரும்ப பெறவேண்டும். விவசாயிகளுக்கும், காவல்துறைகளுக்குமான உறவுகளை மேம்படுத்துவதற்கான முன் உதாரணமாக முதலமைச்சர் நடந்துகொள்ளவேண்டும் .பறிமுதல் செய்யப்பட்டுள்ள டிராக்டர்கள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும். இதனை நான் வலியுறுத்துவதோடு இது மாதிரியான நிகழ்வுகள் தொடருமேயானால் தமிழக

அரசுக்கு எதிரான போராட்டங்களை தமிழக விவசாயிகள் தீவிரபடுத்துவார்கள் என நான் எச்சரிக்கிறேன். டெல்லியில் போராட்டங்களை திசை திருப்புவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுவது வெட்கக்கேடானது. போராட்டக்காரர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு பதிலாக போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது விவசாயிகள் ஓடிவிட்டார்கள். விவசாயிகளே போராட்டத்தை கலைத்து

“மோடி-அமித்ஷா இடையேயான போட்டியால் அலைக்கழிக்கப்படும் விவசாயிகள்” - பி.ஆர்.பாண்டியன் கடும் குற்றச்சாட்டு!

விட்டார்கள் என சொல்வதெல்லாம் நூற்றுக்கு நூறு சதவீதம் பொய்யானது. சிங்கூர் போராட்டம் வலுவடைந்து கொண்டே இருக்கிறது. அதேபோல் காசியாபாத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டமும் வலுவடைந்து கொண்டிருக்கிறது. மேலும் இதன் மூலமாக மத்திய அரசு சட்டத்தை திரும்பப்பெற்றால்தான் விவசாயிகள் சமாதானம் அடைவார்கள். அதை விடுத்து

பொய் பிரச்சாரம் செய்து விவசாயிகளை சட்டத்தின் மூலமாக மிரட்டுவதும் காவல்துறையை பயன்படுத்தி அச்சுறுத்துவதும் வெட்கக்கேடானது அதனை கைவிட பிரதமர் முன்வரவேண்டும். பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும் இருக்கிற போட்டியால் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பதை நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன் . இந்திய அரசியல் அமைப்புச்சட்டப்படி பிரதமர் நடந்துகொள்ள முன்வர வேண்டும். மேலும் திருவாரூர் மாவட்டத்தில் டிராக்டர் பேரணியில் பங்கேற்ற விவசாயிகளின் வீடுகளில் நள்ளிரவு நேரங்களில்

வீடுகளுக்கு முன்னால் நின்று கதவுகளில் கல்லெடுத்து வீசுவதாகவும் வீடுகள் மீது கல் எடுத்து அடிப்பதாகவும், விவசாயிகளை அச்சுறுத்துவதாகவும் இரவு நேரங்களில் சட்டத்திற்கு விரோதமாக காவல்துறையினர் செயல்படுவது என்ற தகவல்கள் அதிர்ச்சி அளிக்கிறது. உண்மையாக இருக்குமெயானால் தமிழக காவல்துறை தலைவர் விரைந்து செயல்பட்டு நன்மதிப்பை காவல்துறைக்கு உருவாக்குவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

banner

Related Stories

Related Stories