இந்தியா

“சதிகளில் இறங்காமல் விவசாயிகளை நேருக்கு நேராக சந்திப்பதுதான் மோடி அரசுக்கு நல்லது” : முரசொலி தலையங்கம் !

குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியை நடத்த விவசாய அமைப்புகள் திட்டமிட்டது. அவர்களுக்கு அனுமதி கொடுத்ததற்கு கூட ஒரு உள்நோக்கம் இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுகிறது.

“சதிகளில் இறங்காமல் விவசாயிகளை நேருக்கு நேராக சந்திப்பதுதான் மோடி அரசுக்கு நல்லது” : முரசொலி தலையங்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அறுபது நாட்களாக அமைதி வழியில் போராடிய விவசாயிகள் போராட்டத்துக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது என்று யோசித்த மத்திய அரசு, அவர்களாகவே ஒரு சதியை உருவாக்கி.. விவசாயிகளை வன்முறையாளர்களாக சித்தரித்து விட்டு, போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கத் துடிக்கிறது, முனைப்புக் காட்டுகிறது. அதனை விவசாயிகளும் உணர்ந்துவிட்டார்கள். நாட்டு மக்களும் உணர்ந்து தெளிந்துவிட்டார்கள்.

நியாயமான அடிப்படையில் ஒரு போராட்டம் நடந்தால் அதனை நியாயமான வழியில் எதிர்கொள்ள மத்திய அரசு முனையவில்லை. பேச்சுவார்த்தை என்ற பெயரால் நாட்களை நகர்த்தியதே தவிர, நியாயமான பரிசீலனை என்பது இல்லை. அதுவும் மத்திய அமைச்சர் தோமர், விவசாயிகளுக்காக பேசாமல் கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக பேசினார். ‘விவசாயத்தில் பல்வேறு கம்பெனிகள் முதலீடு செய்வது விவசாயிகளுக்கு நன்மை' என்று சொல்லி வந்தார். இதுதான் விவசாயிகளை மேலும் மேலும் கோபம் கொள்ள வைத்தது.

மூன்று வேளாண் சட்டங்களையும் முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. திரும்பப் பெற மாட்டோம் என்பது மத்திய அரசின் பிடிவாதம். இந்த இரண்டுக்கும் மத்தியில்தான் நாட்கள் நகர்ந்தது. குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியை நடத்த விவசாய அமைப்புகள் திட்டமிட்டது. அவர்களுக்கு அனுமதி கொடுத்ததற்கு கூட ஒரு உள்நோக்கம் இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுகிறது.

“சதிகளில் இறங்காமல் விவசாயிகளை நேருக்கு நேராக சந்திப்பதுதான் மோடி அரசுக்கு நல்லது” : முரசொலி தலையங்கம் !

அந்த பேரணியின் மூலமாக ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதை வைத்தே விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரலாம் என்று மத்திய அரசு நினைத்திருக்கலாம். அந்த உள்நோக்கத்துடன் அனுமதியை கொடுத்தார்கள். இதனை உணர்ந்த விவசாயிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சாலைகளில் மட்டுமே டிராக்டர் பேரணியை திட்டமிட்டார்கள். அதிலும் ஒருவர் உள்ளே நுழைந்தார். அதுதான் மத்திய உளவுத்துறையின் சதியாகச் சொல்லப்படுகிறது.

தீப் சிந்து என்பது அவரது பெயர். இந்தி திரையுலக நடிகர்களில், ஒருவர். மாடலிங் தொழிலிலும் இருக்கிறார். அவர் தன்னை விவசாயிகளின் ஆதரவாளர் என்று காட்டிக் கொண்டு இந்த போராட்டத்துக்குள் நுழைந்தார். தொடக்கம் முதலே விவசாயிகள் நீங்கலாக யாரையும் தங்கள் இடத்துக்குள் விவசாயிகள் அனுமதிக்கவில்லை. தார்மீக ஆதரவு தருபவர்கள் கூட நேரில் வர வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். ஆனால் இந்த தீப் சிந்து தனியாக ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அங்கே இருந்து விவசாயிகளுக்கு போராடுவதைப் போல நடித்தார். மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து பேசிய அவர், அத்தோடு நிற்காமல் சர்ச்சைக்குரிய பல்வேறு கருத்துக்களையும் பேசி இருக்கிறார்.

இந்தியாவுக்கு கூட்டாட்சி தத்துவம் சரியாக வராது என்று அவர் பேசி இருக்கிறார். மறைந்த பஞ்சாப் தலைவர்களில் ஒருவரான சர்ச்சைக்குரிய பிந்தரன்வாலேவை புகழ்ந்து அவர் பேசி இருக்கிறார். இது ஊடகங்களில் எளியானதும், இதனைக் கண்டித்து விவசாய சங்கத் தலைவர்களே அறிக்கை விட்டார்கள். தீப் சிந்துவுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொன்னார்கள்.

“சதிகளில் இறங்காமல் விவசாயிகளை நேருக்கு நேராக சந்திப்பதுதான் மோடி அரசுக்கு நல்லது” : முரசொலி தலையங்கம் !

அதாவது விவசாயிகளுக்கு ஆதரவாளன் என்று காட்டிக் கொண்டு விவசாய அமைப்புகளுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடன் தீப் சிந்து செயல்பட்டு வருவதை வெளிப்படையாகவே கண்டித்து விவசாய சங்கங்கள் அறிக்கை வெளியிட்டார்கள். இந்த நிலையில், தனது சதியை சனவரி 26 ஆம் தேதியும் நடத்தி இருக்கிறார் அவர்.

விவசாயிகள் அறிவித்த நேரத்துக்கு முன்னதாக அவர் தனது பேரணியைத் தொடங்கி இருக்கிறார். விவசாயிகள் சொன்ன பாதைக்கு மாறாக வேறு பாதையில் தனது டிராக்டர் பயணத்தையும் தீப் சிந்து நடத்தி இருக்கிறார். இதன் உச்சகட்டமாக செங்கோட்டையில் ஏறி தனது அமைப்பின் கொடியையும் ஏற்றி இருக்கிறார்.

இவர் பெயர் தீப் சிந்து, இவர் விவசாயி அல்ல என்ற தகவல் தெரிவதற்கு முன்னதாகவே விவசாயிகள் வன்முறையில் இறங்கி விட்டார்கள், செங்கோட்டையில் கொடியை ஏற்றிவிட்டார்கள், அது காலிஸ்தான் கொடி என்ற தகவல் நாடு முழுவதும் பரவிவிட்டது.

“சதிகளில் இறங்காமல் விவசாயிகளை நேருக்கு நேராக சந்திப்பதுதான் மோடி அரசுக்கு நல்லது” : முரசொலி தலையங்கம் !

இதுதான் மத்திய அரசு எதிர்பார்த்த செய்தி. அந்த சதி கச்சிதமாக நிறைவேறிவிட்டது. விவசாயிகளை வன்முறையாளர்களாக காட்ட நினைத்தார்கள். அது நிறைவேறிவிட்டது. இந்த நிலையில்தான் தீப் சிந்துவின் முகம் ஊடகங்களில் அம்பலமானது.

இவர் பிரதமர் மோடியுடன் இருக்கும் புகைப்படங்கள், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியானது. பா.ஜ.க. எம்.பி.யான சன்னி தியோல் தேர்தலில் நின்ற போது அவருக்காக முழுமையாக வேலை பார்த்துள்ளார் தீப் சிந்து. அதுவும் அம்பலமானது.

பகையாளி குடும்பத்தை உறவாடி கெடு என்ற அடிப்படையில் உள்ளே அனுப்பி வைக்கப்பட்டவர் தான் தீப் சிந்து என்பது வெளியாகிவிட்டது. இத்தகைய சதிகளில் இறங்காமல் விவசாயிகளை நேருக்கு நேராக சந்திப்பது தான் மத்திய அரசுக்கு நல்லது.

banner

Related Stories

Related Stories